காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவா கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற கட்சி என்ற பெயர் இருந்தது. ஆனால் தற்போது தனது மதச்சார்பற்ற தன்மையை காங்கிரஸ் கட்சி இழந்து கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவான போக்கை காங்கிரஸ் கடைப்பிடித்து வருவதை பார்க்க முடிகிறது.
குஜராத் சட்டப்பேரவையைச் சேர்ந்த 5 காங்கிரஸ் எம்.எல்ஏ.அக்கள் பாஜகவுக்கு தாவிவிட்டனர். அடுத்த சில மாதங்களில் மேலும் சிலர் பாஜகவுக்கு தாவலாம்.
சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன், பாஜகவில் இணைந்துவிட்டார்.
பாஜகவைப் போலவே இந்துத்துவா கொள்கைக்கு காங்கிரஸ் மாறி வருகிறது. மிதவாத இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது அந்தக் கட்சி தனது மதச்சார்பற்ற தன்மையை மாற்றிக்கொண்டுவிட்டது.
மத்தியபிரதேசத்தில் பசுவை வெட்டிக் கொன்றதாக பலர் மீதுகாங்கிரஸ் அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதனால் இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago