மக்களவைத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியா?- ராகுல் காந்தி விளக்கம்

By பிடிஐ

ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்காகவும், சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் எப்போதும் பாடுபடும் ஒரே கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார். தேர்தலுக்கு முன்பாக பேசும்போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.15 லட்சம் பெற்றுத் தருவேன் என்றார். அதைச் செய்தாரா? வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் குறைந்தபட்ச வருமான திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்து நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்டேன். இந்தமுறை 2-வது தொகுதியாக நான் கர்நாடகா அல்லது கேரளாவில் போட்டியிடவேண்டும் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமேதி தொகுதி, நான் பணியாற்ற வேண்டிய இடமாகும். அது எப்போதும் என்னுடைய தேர்வாக இருக்கும். நான் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும்.

அதேபோல பிரியங்கா காந்தி வதேரா, இம்முறை தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்கிறார்கள். இது அவர் சம்பந்தப்பட்ட விஷயம். இதுதொடர்பாக அவர்தான் முடிவெடுக்கவேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்