கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கடந்த ஜனவரியில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயற்சி எடுத்து விமர்சனத்துக்கு ஆளானார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரியில் மஜத எம்எல்ஏக்களிடம் எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக முதல்வர் குமாரசாமி ஆடியோ ஆதாரத்தைவெளியிட்டார். இதில் எடியூரப்பா மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு எடியூரப்பா, “பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் வருகிற தேர்தலில் கர்நாடகாவில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “எடியூரப்பாதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர் மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த முறை எடியூரப்பாவிடம் உடனடியாக விளக்கம் அளிக்கும்படியும் இனி இதுபோல் பேசக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகே எடியூரப்பா தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்” என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago