‘2-க்கு மேல் இருந்தாலும் போட்டியிட தடையில்லை’

By செய்திப்பிரிவு

பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “அரசுப் பணி, நிதியுதவி மற்றும் மானியம் பெறுவதற்கு 2 குழந்தைகள் நெறிமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான சட்டத்தில் இந்த நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும். இந்த நெறிமுறையை ஏற்காதவர்களின் வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை போன்ற சட்டப்பூர்வ உரிமைகளை திரும்பப் பெறவேண்டும்” என்று கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி விசாரணை

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ உங்கள் கோரிக்கையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நாங்கள் எதுவும் செய்யமுடியும் என எங்களுக்குத் தோன்றவில்லை. 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க முடியாது என அரசியல்சாசன அமர்வு எவ்வாறு கூறமுடியும். அவ்வாறு கூறினால் அது ஏற்கத் தகுந்ததா என்பதுடன், அது சட்டப்பூர்வமானதா, நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்டதா என்ற பிரச்சினை எழாதா?"  என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, 2 குழந்தைகள் நெறிமுறை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதால் அதன் அடிப்படையில் மனுவை திரும்பப் பெற மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்