பிரதமர் மோடியின் தலைமையோடு ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா புகழாரம்

By பிடிஐ

கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் பிரியங்கா காந்தியின் உதவியால், ராகுலின் வளர்ச்சி அதிகரித்தாலும், பிரதமர் மோடியின் தலைமையோடு இருவரையும் ஒப்பிடமுடியாது என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும்கூட, கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிவசேனா கட்சி மத்திய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வந்தது.

ஆனால், கடந்த இரு நாட்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்கு பாஜக, சிவசேனா கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து பிரமதர் மோடியை சிவசேனாக் கட்சி புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் இந்த கேள்விகள் எழுகின்றன, எங்கள் கூட்டணியால் எதிர்க்கட்சி 'பூச்சிகள்' நசுக்கப்படும்.  

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல் காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது, பிரியங்காவும் உதவியுள்ளார். ஆனால், இருவரையும், பிரதமர் மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள், ராமர் கோயில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தரப்படுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மகாராஷ்டிராவின் நலனுக்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், தேசிய ஜனநாயக்கூட்டணியில் சேர முடிந்ததே, கருத்துவேறுபாடுகளை மறந்து காங்கிரஸ் கட்சி மகாகத்பந்தனை அமைக்க முடிந்ததே. ஆதலால், பாஜக தலைமையிலான கூட்டணியில் சிவசேனா எப்போதும் அங்கமாக இருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்ப்பலை இருந்தது, அதேசமயம், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில், அலையின் அடிப்படையில் தேர்தலில் போட்டிய இருக்காது. ஆனால், சித்தாந்தம், வளர்ச்சிப்பணிகள், எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்