மேற்குவங்கத்தில் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முன்னர் கூறியபோது, "மாநிலங்களின் நிலவரத்தைப் பொறுத்து கூட்டணி அமைப்போம்" என்று தெரிவித்தார். இந்தப் பின்னணியில் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியபோது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் திட்டமில்லை. நாட்டின் எந்தப் பகுதியிலும் காங்கிரஸுடன் கைகோக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
கேரளாவில் மார்க்சிஸ்டும் காங்கிரஸும் பலம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. அந்த மாநிலத்தில் தற்போது முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. சபரிமலை, காங்கிரஸ் தொண்டர்கள் கொலை உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago