பஞ்சாபில் வரும் 26-ம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். டெல்லியில் கடந்த 13-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்களின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து விவாதித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வரும் 26-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். இக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார். இத்தகவலை திரிணமூல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொல்கத்தாவில் தெரிவித்தார். பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago