இந்திய அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்த பெருமை காங்கிரஸின் காந்தி குடும்பத்தை சாரும். இதை பின்பற்றி நாடு முழுவதிலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் குடும்ப உறுப்பினர்களை களம் இறக்கி வாரிசு அரசியலை வளர்த்து வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலிலும் பல காங்கிரஸ் தலை வர்கள், தங்களது குடும்ப உறுப் பினர்களை வேட்பாளர்களாக களம் இறக்க உள்ளனர்.
ராஜ பரம்பரையை சேர்ந்த வரும் மத்திய பிரதேசத்தின் குணா மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் பொதுச் செயலாளராக்கப்பட்டு உத்தர பிரதேச மேற்கு பகுதி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தனது மனைவி பிரியதர்ஷினி ராஜேவை மக்களவைத் தேர்தலில் போட்டி யிட வைக்க விரும்புகிறார். இதற் காக பிரியதர்ஷினி கடந்த சில மாதங்களாக மத்திய பிரதேசத் தின் குவாலியரில் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது.
வரும் தேர்தலில் தனக்கு பதி லாக மனைவிக்கு வாய்ப்பு அளிக் கும்படி சிந்தியா கோருவதாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பை ஏற்றுள்ள சிந்தியா மீண்டும் மக்களவைக்கு போட்டியிடும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும், சிந்தியாவின் பிரதான இலக்கு மத்திய பிரதேச முதல்வர் பதவி எனவும் கூறப்படுகிறது. எனினும், இருவரும் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளன.
மத்தியபிரதேசத்தின் சிந்த் வாடா தொகுதியின் மக்களவை உறுப்பினரான கமல்நாத் மாநி லத்தின் முதல்வராக பதவியேற் றுள்ளார். தனது தொகுதியில் இரண்டு மகன்களில் ஒருவரான நகுல்நாத்தை களம் இறக்க அவர் விரும்புகிறார். ஏற்கனவே கமல்நாத் தனது மனைவி அல்காநாத்தை 2009 மக்களவைத் தேர்தலில் சிந்த்வாடாவில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தார்.
சச்சின் பைலட்
ராஜஸ்தானின் துணை முதல் வரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான சச்சின் பைலட், தனது மனைவி சாரா அப்துல்லாவை, அஜ்மீர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி செய்கிறார். ஜம்மு-காஷ்மீர் முன் னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வின் மகள்தான் சாரா. கணிசமான முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட அஜ்மீரில் சாராவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் கருதப் படுகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதி எம்பியான சச்சினின் தாயார் ரமா பைலட் மீண்டும் காங் கிரஸ் சார்பில் போட்டியிட உள் ளார். இவர்களுடன் மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை மக் களவைத் தேர்தலில் அரசியல் வாரிசுகளாக களம் இறங்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago