வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மக்களவைத் தேர்தலில் ஆன்லைனில் ஓட்டளிக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையம் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:வரும் மக்களவைத் தேர்தலில் என்ஆர்ஐ-கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அதுபோன்ற வசதிகள் செய்யப்படவில்லை. என்ஆர்ஐ-கள் ஆன்லைனில் வாக்களிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுபோன்ற திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இப்போதைய நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் வாக்களிக்க வேண்டுமென்றால், அவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, இந்தியாவுக்கு வந்து தனது தொகுதிக்கு சென்று பாஸ்போர்ட்டை காட்டி ஓட்டளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கணக்கின்படி பல்வேறு நாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago