அரசியல் லாபங்களுக்காக தேசப் பாதுகாப்பை ஆபத்துக்கு ஆளாக்குவதைச் சகிக்க முடியாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் மீதான ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், ''புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏராளமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.
ஆளும் பாஜவின் திறமையற்ற போக்கால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தங்களுடைய சிறுபிள்ளைத்தனமான செய்கைகளாலும் தவறான செயல்களாலும் பாஜக தலைவர்கள் நாட்டையே சிறுமைப்படுத்துகின்றனர்.
சுய லாபங்களுக்காக தேசத்தின் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்குவதைச் சகிக்க முடியாது. அரசியல் தேவைகளுக்கான ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்வதையும் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்றார் சந்திரபாபு நாயுடு.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago