வடசென்னை தொகுதி பெரும்பாலும் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதி. கடந்த முறை மும்முனைப் போட்டியில் அதிமுக வென்றது. இம்முறை திமுக நேரடியாக வேட்பாளரை நிறுத்தி உள்ள நிலையில் அதிமுக, கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது. தேமுதிக சார்பில் மோகன்ராஜ் பொட்டியிடுகிறார்.
அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் போட்டியில் வேகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி போட்டியிடுகிறார் இத்தொகுதியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் புதியவர்கள் என்பதால் பிரச்சாரத்தில் யார் முந்துகிறார்களோ? தொகுதியில் எந்தக் கட்சி அதிக வாக்குகளை வைத்துள்ளதோ? அவரே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது கள நிலவரம்.
அதிமுக கூட்டணியில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அமமுக பலமாக உள்ளது. அதிமுக வாக்குகளை அமமுக இங்கு அதிக அளவில் பிரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஏற்கெனவே அதிக வாக்குகளை டிடிவி தினகரன் பெற்றுள்ளதால் இத்தொகுதியில் டிடிவி தினகரன் கடுமையான பாதிப்பை அதிமுக கூட்டணிக்கு கொடுக்கலாம்.
அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உள்ளூர்க்காரராக இல்லாததும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. திமுகவுக்குள் உட்கட்சிப் பிரச்சினைகள் இருந்தாலும் சென்னையில் திமுக வெல்லும் தொகுதியில் இதுவும் ஒன்று என்பதே தற்போதைய நிலை.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், இது கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான பொதுவான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது என்பதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பின்படி, வடசென்னை தொகுதியில் திமுகவின் கை ஓங்குகிறது. கம்யூனிஸ்ட்டுகளின் வரவேற்பும், தொழிற்சங்கங்களின் ஆதரவும் இருப்பதால் ஆற்காடு வீராசாமியின் மகன் மருத்துவர் கலாநிதி வீராசாமிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பிரச்சாரக் களத்தில் பரவலான வரவேற்பைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் இரண்டாம் இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தொகுதிக்குப் புதியவர் என்பதால் அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் உள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago