தென் சென்னை மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

படித்த, பணியாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் பகுதியையும் உள்ளடக்கிய தொகுதி. வெளி மாநிலத்தவர்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி இது. அதிகமான மக்கள் நெருக்கமும், வணிக, வர்த்தக நிறுவனங்களும் உள்ள பகுதி.

சென்னையில் வர்த்தக மையப்பகுதியாக விளங்கும் தியாகராய நகரும் இந்த தொகுதிகள் அமைந்துள்ளது.

முரசொலி மாறன், டி.ஆர்.பாலு போன்ற திமுக மூத்த தலைவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவரான மறைந்த வெங்கட்ராமன் போன்றவர்களும் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. திமுகவை தவிர தேசியக்கட்சிகளுக்கும் ஒரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி.

காங்கிரஸ் சார்பில் வைஜெயந்தி மாலா போட்டியிட்டு வென்ற தொகுதி. பாஜகவைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி, மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் இங்கு போட்டியிட்ட போதிலும் வெற்றி பெறவில்லை. கடந்த 2 தேர்தல்களில் அதிமுகவே இந்த தொகுதியில் முத்திரை பதித்து வருகிறது.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

மயிலாப்பூர்

தி.நகர்

சைதாப்பேட்டை

விருகம்பாக்கம்

வேளச்சேரி

சோழிங்கநல்லூர்

 

தற்போதைய எம்.பி

ஜெயவர்த்தன், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்அதிமுகஜெயவர்த்தன்438404திமுகடி.கே.எஸ் இளங்கோவன்301779பாஜகஇல.கணேசன்256786காங்ரமணி24420ஆம் ஆத்மிஜாகிர் உசேன்17312

 

 

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்1971முரசொலி மாறன், திமுகநரசிம்மன், சுதந்திரா கட்சி1977வெங்கட்ராமன், காங்முரசொலி மாறன், திமுக1980வெங்கட்ராமன், காங்சுலோச்சனா சம்பத், அதிமுக1984வைஜெயந்தி மாலா,காங் இரா.செழியன், ஜனதா1989வைஜெயந்தி மாலா, காங்ஆலடி அருணா, திமுக1991ஸ்ரீதரன், அதிமுகடி.ஆர்.பாலு, திமுக1996டி.ஆர்.பாலு, திமுககணேசன், அதிமுக1998டி.ஆர்.பாலு, திமுகஜனா.கிருஷ்ணமூர்த்தி, பாஜக1999டி.ஆர்.பாலு, திமுகதண்டாயுதபாணி, காங்2004டி.ஆர்.பாலு, திமுகபதர் சயீத், அதிமுக2009ராஜேந்திரன், அதிமுகஆர்.எஸ்.பாரதி, திமுக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

மயிலாப்பூர் : கே. நட்ராஜ், அதிமுக

தி.நகர் : சத்திய நாராயணன், அதிமுக

சைதாப்பேட்டை : மா.சுப்பிரமணியன், திமுக

விருகம்பாக்கம் : விருகை ரவி, அதிமுக

வேளச்சேரி : வாகை சந்திரசேகர், திமுக

சோழிங்கநல்லூர் : அரவிந்த் ரமேஷ், திமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)

இசக்கி சுப்பையா (அமமுக)

ரங்கராஜன் (மநீம)

ஷெரின் (நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்