நாகப்பட்டினம் இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் டெல்டா மாவட்டங்களில் ஒன்று. விவசாயத்துக்கான நீர் பற்றாக்குறை கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கியப் பிரச்சினையாக இந்தத் தொகுதியில் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கான சரியான நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க இத்தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாழை ம.சரவணன் (அதிமுக), எம்.செல்வராசு (இந்திய கம்யூ), செங்கொடி (அமமுக), கே. குருவையா (மநீம), மாலதி ( நாம் தமிழர்) ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
இதில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம். செல்வராசு மூன்று மூறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இத்தொகுதியின் அனுபவமிக்க வேட்பாளராக இருக்கிறார். இவரை ஒப்பிடும்போது , அதிமுகவின் தாழை சரவணன், அமமுகவின் செங்கொடி ஆகியோருக்கு அரசியல் அனுபவம் இல்லை. இவர்களை அந்த கட்சியின் நிர்வாகிகள்தான் வழி நடத்திச் செல்கிறார்கள்.
இதில் அதிமுகவின் வேட்பாளர் தாழை ம.சரவணனுக்கு நாகூரில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. எனவே திமுக தலைமையிலான கூட்டணி இங்கு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு முந்தியுள்ளார். அவருக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதிமுக தாழை ம.சரவணனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மாலதியும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் அமமுக செங்கொடி உள்ளார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago