திண்டுக்கல் மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

அதிமுக உதயமானது சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த புதிய கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் முதல் சந்தித்த தேர்தலிலேயே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது திண்டுக்கல் தொகுதி.

மிகப்பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்கு தள்ளி இடைத் தேர்தல். இந்த தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத் தேவர் பெரும் வெற்றி பெற்றார்.

அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்த தேர்தலில் தான் களம் இறங்கியது. இந்த தேர்தலில காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அதுமுதலே திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு பல தேர்தல்களில் வெற்றி தேடி தந்துள்ளது. பெரும்பாலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதியுள்ள இந்த தொகுதியில் சிலமுறை கூட்டணியுடன் காங்கிரஸ் வென்றுள்ளது.

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு அதிகமாற்றங்களை கொண்ட தொகுதியில் திண்டுக்கல்லும் ஒன்று. பழனி நாடாளுமன்ற தொகுதி ஒழிக்கப்பட்டு அதில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் இணைக்கப்பட்டன.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

திண்டுக்கல்

நத்தம்

பழனி

ஒட்டன்சத்திரம்

ஆத்தூர்

நிலக்கோட்டை (எஸ்சி)

 

தற்போதைய எம்.பி

உதயகுமார், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்அதிமுகஉதயகுமார்510462திமுககாந்திராஜன்382617தேமுதிககிருஷ்ணமூர்த்தி93794காங்கிரஸ்என்.எஸ்.வி.சித்தன்35632சிபிஎம்பாண்டி19455

 

 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்1971ராஜாங்கம், திமுகசீமச்சாமி, சுதந்திரா கட்சி1977மாயத்தேவர், அதிமுகபாலசுப்பிரமணியம், சிபிஎம்1980மாயத்தேவர், திமுகராஜன் செல்லப்பா, அதிமுக1984நடராஜன்மாயத்தேவர், திமுக1989திண்டுகல் சீனிவாசன், அதிமுகஎன்.வரதராஜன், சிபிஎம்1991திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகமாயத்தேவர், திமுக1996என்எஸ்வி சித்தன், தமாகாதிண்டுக்கல் சீனிவாசன், அதிமுக1998திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக,என்எஸ்வி சித்தன், தமாகா1999திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகசந்திரசேகர், திமுக2004என்எஸ்வி சித்தன்,காங்கிரஸ் ஜெயராமன், அதிமுக2009என்எஸ்வி சித்தன், காங்கிரஸ்பாலசுப்பிரமணி, அதிமுக

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

திண்டுக்கல் : சீனிவாசன், அதிமுக

நத்தம் : ஆண்டிஅம்பலம்: திமுக

பழனி : செந்தில்குமார், திமுக

ஒட்டன்சத்திரம் : சக்கரபாணி, திமுக

ஆத்தூர் : ஐ.பெரியசாமி, திமுக

நிலக்கோட்டை (எஸ்சி) : தங்கதுரை, அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

ஜோதி முத்து (பாமக)

ப. வேலுச்சாமி (திமுக)

ஜோதிமுருகன் (அமமுக)

எஸ்.சுதாகர் (மநீம)

மன்சூர் அலிகான் (நாம் தமிழர்)

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்