கள நிலவரம்: கடலூர் தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி  ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ரமேஷ், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் சித்ரா, அமமுக சார்பில் காசிதங்கவேல்  மற்றும் அரசியல் கட்சி, சுயேட்சை  வேட்பாளர்கள் உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதால் கூட்டணி பலமாக உள்ளதால் தொண்டர்கள் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் அதிமுகவில் அமைச்சர் சம்பத் ஒரு கோஷ்டியாகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் ஒரு கோஷ்டியாகவும் செயல்படுவதாலும் கூட்டணிக்கட்சியினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது  அதிமுக கூட்டணி பாமக வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக  கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர். ஆனால் திமுக வேட்பாளர் ரமேஷ் அரசியலில் இருந்தாலும் தொண்டர்களிடம் அறிமுகம் இல்லாதவர் என்பதே  இவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக என  வலுவான கூட்டணியாக இருப்பதால் எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவார் என திமுகவினர் கூறி வருகின்றனர்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில்  திமுகவுக்கு சாதகமான நிலை இதுவரை நிலவி வருகிறது. அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை வாக்குகளைப் பிரித்தாலும் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது.

 

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமிக்கு வெற்றி முகம்.  திமுக வேட்பாளர்  ஸ்ரீரமேஷ் இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சித்ரா 3-ம் இடத்தில் உள்ளார்.  அமமுக வேட்பாளர் கார்த்திக் நான்காம் இடத்தில் உள்ளார்.

 

 

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamadenu.in/opinion-poll-result?utm_source=site&utm_medium=TTH_election2019_banner&utm_campaign=TTH_election2019_banner

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE