கள நிலவரம்: சிதம்பரம் தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் சிதம்பரமும் ஒன்று. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இங்கு போட்டியிடுவதால் இந்தத் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீண்டகாலமாக தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்று. இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவை தொகுதிகள் பலவும் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இடம் பெயர்ந்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பலமுறை காங்கிரஸ் இங்கு வென்றுள்ளது. இருப்பினும் திமுக, அதிமுகவுக்கு அதிகமாக வாக்கு வாங்கி உள்ளது. இதைத் தவிர பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உண்டு.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பொ. சந்திரசேகர் (அதிமுக), திருமாவளவன் (விசிக), ஏ.இளவரசன் (அமமுக), ரவி (மநீம), சிவா ஜோதி (நாம் தமிழர்) உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

திருமாவளவன் பானை சின்னத்தில் இங்கு போட்டியிடுகிறார். திமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன் விடுதலை சிறுத்தைகளுக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதால் அந்தக் கூட்டணிக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.

அதேசமயம் பாமகவின் வாக்குகளை அதிமுக சாதகமாகப் பார்க்கிறது. ஏற்கெனவே இந்தத் தொகுதியில் எம்.பி.யாக இருந்ததுடன் மக்களிடம் நன்கு அறிமுகமானவர் என்பதால்  திருமாவளவனுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதைஒ பார்க்க முடிகிறது.   

தண்ணீர்  பிரச்சினை தொடங்கி மற்ற பல தொகுதிகளில் மக்கள் முன் வைக்கும் பிரச்சினைகள் இங்கும் எதிரொலிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி உள்ளிட்டவற்றையும் மக்கள் முன் வைக்கின்றனர்.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடந்து களம் காணும் பகுதி என்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக் கணிப்பின்படி, அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவா ஜோதி 3-ம் இடத்திலும் அமமுக வேட்பாளர் இளவரசன் 4-ம் இடத்திலும் உள்ளனர்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamadenu

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்