குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசுத் தொழில் மட்டுமின்றி, அச்சுத் தொழிலும் மிக பிரபலமானது. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நம்நாட்டு ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்கின்றன. அதோடு, அச்சுத் தொழிலும் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருவதும் சிவகாசிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. சிவகாசி தொகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசுத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்தொகுதியில் நாயக்கர், நாடார் , முக்குலத்தோர் என பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர்.
சாலைகள் விரிவாக்கம், போதிய இட வசதியுடன் பேருந்து நிலையம், சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம், சிவகாசி- திருத்தங்கல் சாலையில் ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள். சிவகாசி தொகுதியில் சிவகாசி நகராட்சி, திருத்தங்கல், நகராட்சி, சிவகாசி ஒன்றியம், திருத்தங்கல் ஒன்றியம் மற்றும் ஈஞ்சார், ஆனையூர், மாறனேரி, துரைசாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, சித்துராஜபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேதிய காரங்கிரஸ் 2 முறையும், 4 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும், மதிமுக ஒரு முறையும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006ல் மதிமுக ஞானதாஸும், 2011ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜியும் வெற்றிபெற்றனர். இவர் அமைச்சராக உள்ளார்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கே.டி.ராஜேந்திரபாலாஜி
அதிமுக
2
சொ. ஸ்ரீராஜாசொக்கர்
காங்கிரஸ்
3
ரா.சுதாகரன்
தேமுதிக
4
ம.திலகபாமா
பாமக
5
அ.கோ.பார்த்தசாரதி
பாஜக
6
த.பாபு
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
சிவகாசி தாலுகா (பகுதி)
இஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.
திருத்தங்கல் (பேரூராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,16,800
பெண்
1,20,828
மூன்றாம் பாலினத்தவர்
21
மொத்த வாக்காளர்கள்
2,37,649
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2011
K.T.ராஜேந்திர பாலாஜி
அதிமுக
59.17
2006
R.ஞானதாஸ்
மதிமுக
43.71
2001
அ.ராஜகோபால்
த.மா.கா
42.45
1996
R.சொக்கர்
த.மா.கா
40.14
1991
J.பாலகங்காதரன்
அதிமுக
66.75
1989
பெ. சீனிவாசன்
திமுக
31.2
1984
V.பாலகிருஷ்ணன்
அதிமுக
38.73
1980
V.பாலகிருஷ்ணன்
அதிமுக
61.32
1977
K.ராமசுவாமி
ஜனதா கட்சி
31.11
1971
கா. காளிமுத்து
திராவிட முன்னேற்றக் கழகம்
31.11
1967
அழகுதேவர்
சுதந்திராக் கட்சி
1962
எஸ். ராமசாமி நாயுடு
இந்திய தேசிய காங்கிரஸ்
1957
எஸ். ராமசாமி நாயுடு
இந்திய தேசிய காங்கிரஸ்
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
ஞானதாஸ்.R
மதிமுக
79992
2
தங்கராஜ்.V
திமுக
70721
3
ராஜேந்திரன்.V
தேமுதிக
12657
4
மணிகண்டன்.T
பார்வர்டு பிளாக்
8329
5
ராஜேந்திரன்.K
பகுஜன் சமாஜ் கட்சி
5698
6
ரஹமத்துல்லா..J
சுயேச்சை
1961
7
பார்த்தசாரதி.G
பாஜக
1476
8
முருகேசன்.P
சுயேச்சை
840
9
ஆரோக்கியராஜ்.V
சுயேச்சை
281
10
கனிராஜன்.J
சுயேச்சை
269
11
தலைமலைராஜா.M
சுயேச்சை
257
12
குமரேசன்.R
சுயேச்சை
182
13
தங்கமுநியாண்டி.V
சுயேச்சை
177
14
சுப்புராஜ்.K
சுயேச்சை
161
183001
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
ராஜேந்திரபாலாஜி.K.T
அதிமுக
87333
2
வனராஜா.T
திமுக
51679
3
மீராதேவி.P
பாஜக
4198
4
கமலவேல்செல்வன்.P
பகுஜன் சமாஜ் கட்சி
722
5
பாலசுப்ரமணியன்.P.K
சுயேச்சை
657
6
ராஜா சேகர்.R
சுயேச்சை
577
7
மாதவன்.P
சுயேச்சை
486
8
ஆறுமுகசாமி.A
சுயேச்சை
381
9
குருநாதன்.P
சுயேச்சை
346
10
நவரங்கராஜா.K
சுயேச்சை
318
11
ராஜ்குமார்.R
சுயேச்சை
251
12
தியாகராஜன்(எ)யோகநாடார்.P.I.D
சுயேச்சை
190
13
கனகராஜ்.R
சுயேச்சை
133
14
குமார்.S
சுயேச்சை
124
15
சேகர்.V
சுயேச்சை
109
செல்வராஜ்.R
சுயேச்சை
101
147605
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago