வேலூர் மாவட்டத்தில் 1977 முதல் தனித் தொகுதி அந்தஸ்துடன் தேர்தல்களை அரக்கோணம் தொகுதி சந்தித்துவருகிறது. கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. சென்னையின் கடைசி எல்லையாக அரக்கோணம் இருக்கிறது. அரக்கோணம் பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக சென்னையை நம்பி இருக்கிறார்கள்.
ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் ஈட்டும் மிகப்பழமையான அரக்கோணம் ரயில் சந்திப்பு நிலையம். தென்னிந்திய கடற்பரப்பைக் கண்காணிக்கும் மிக வலிமையான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம். தென்னிந்திய அளவில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்களின் பயிற்சி மையம் மற்றும் மெளலிவாக்கம் கட்டிட விபத்தில் தொடங்கி சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்) தளமும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.
எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை, ராம்கோ சிமென்ட் ஷீட் ஆலை, அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை, டென்னி ஸ்டீல்ஸ் என குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இருந்தாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது.
அரக்கோணம் நகராட்சி, காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 11 கிராம ஊராட்சிகள், அரக்கோணம் ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள், நெமிலி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் மற்றும் தக்கோலம் பேரூராட்சி பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளது.
1951-ம் ஆண்டில் தொடங்கி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் தொகுதியாக இருந்தாலும் கடந்த 3 ஆண்டுக்கு முன்புதான் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது. தொகுதியின் நீண்டகால கோரிக்கையாக பெரிய பட்டியலை தொகுதி மக்கள் முன்வைக்கிறார்கள்.
அவை, புறவழிச்சாலை, ரயில் நிலையம் வழியாக பேருந்து சேவை, கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறும் காந்தி ரோடு விரிவாக்கம், முடங்கிக்கிடக்கும் சிட்கோ, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நிலத்தை மீட்பது, அரக்கோணம் ரயில் நிலையம் சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பதால் ரயில் முனையமாக மாற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனை நோயாளிகள் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பும் நிலை மாற்றி, தரமான சிகிச்சை அளிக்க மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும். மாவட்ட தலைநகருக்குச் செல்ல குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகிறது. எனவே, அரக்கோணத்தை காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த 1952-ல் தொடங்கி இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ள அரக்கோணம் தொகுதியில் திமுக 7, அதிமுக 4, காங்கிரஸ் 2, சுயேச்சை ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் சு.ரவி மீண்டும் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எஸ்.ரவி
அதிமுக
2
என்.ராஜ்குமார்
திமுக
3
ஜி.கோபிநாத்
விசிக
4
ஆர்.அற்புதம்
பாமக
5
சி.விஜயன்
பாஜக
6
எம்.சரவணன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அரக்கோணம் வட்டம் (பகுதி):
செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, பரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தபுரம். ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.
அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,07,642
பெண்
1,11,890
மூன்றாம் பாலினத்தவர்
19
மொத்த வாக்காளர்கள்
2,19,551
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
பக்கதவத்சலு நாயுடு
சுயேச்சை
21057
45.98
1957
சடையப்ப முதலியார்
காங்கிரஸ்
29669
62.46
1962
எஸ் . ஜே. இராமசாமி
திமுக
26586
38.98
1967
எசு. ஜே. இராமசாமி
திமுக
38478
52.78
1971
என். எசு. பலராமன்
திமுக
42256
60.11
1977
வி. கே. இராசு
அதிமுக
24630
33.5
1980
எம். விசயசாரதி
அதிமுக
36314
48.84
1984
வி. கே. இராசு
திமுக
52657
52.24
1989
வி. கே. இராசு
திமுக
42511
46.78
1991
லதா பெரியகுமார்
காங்கிரஸ்
61314
55.24
1996
ஆர். தமிழ்ச்செல்வன்
திமுக
70550
58.13
2001
பவானி கருணாகரன்
அதிமுக
67034
55.09
2006
எம். ஜெகன்மூர்த்தி
திமுக
66338
---
2011
சு.ரவி
அதிமுக
79409
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
வேதாச்சலம்
காங்கிரஸ்
19165
41.85
1957
தாமசு
சுயேச்சை
10527
22.16
1962
பி. பக்கதவத்சலு நாயுடு
காங்கிரஸ்
25152
36.87
1967
பி. நாயுடு
காங்கிரஸ்
30870
42.35
1971
எசு. கே. சுப்பரமணிய முதலி
நிறுவன காங்கிரஸ்
26878
38.24
1977
எ. கண்ணாயிரம்
திமுக
17041
23.18
1980
ஜி. செயராசு
காங்கிரஸ்
35393
47.6
1984
எம். விசயசாரதி
அதிமுக
46344
45.98
1989
பி. இராசுகுமார்
காங்கிரஸ்
20538
22.6
1991
ஜி. மணி
திமுக
30332
27.33
1996
ஆர். ஏழுமலை
பாமக
23730
19.55
2001
ஆர். இரவிசங்கர்
திமுக
46778
38.44
2006
எசு.இரவி
அதிமுக
58782
---
2011
செல்லப்பாண்டியன்
விசி
53172
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
M. ஜெகன்மூர்த்தி
தி.மு.க
66338
2
S. ரவி
அ.தி.மு.க
58782
3
உஷா ராணி.R
தே.மு.தி.க
9185
4
ரவி.V
சுயேட்சை
2092
5
C.விஜயன்
பிஜேபி
1561
6
M.அமுதா
எஸ்.பி
1143
7
C.பாபு
சுயேச்சை
472
8
S.மோகன்
சுயேச்சை
306
9
M.தனபால்
சுயேச்சை
218
10
P.அண்ணாதுரை
சுயேச்சை
159
11
K.சம்பத்
சுயேச்சை
139
12
S.கோதண்டம்
சுயேச்சை
132
13
S.அன்பு
சுயேச்சை
119
மொத்தம்
140646
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. ரவி
அ.தி.மு.க
79409
2
S. செல்லபாண்டியன்
வி.சி.க
53172
3
G. மகாலிங்கம்
பு.பா
3007
4
P. சுதாகர்
பிஎஸ்பி
2030
5
S. செந்தில்குமார்
ஐ.ஜே,கே
1755
6
டைடஸ் தியாகராஜன்
எ.ஐ.ஜே,எம்.கே
1483
7
D. ரவி
சுயேட்சை
1103
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago