47 - வாணியம்பாடி

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் தொழில் வளம் மிக்க தொகுதியாக வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி விளங்கி வருகிறது. தொகுதி மறுசீரமைக்குப் பின்னர் வாணியம்பாடி தனி தொகுதியாக உருவெடுத்தது. வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வாணியம்பாடி திகழ்கிறது.

இதனால், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்த கட்சிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில் பாலாறு தொடங்கும் புல்லூர் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு ஆகும். இது தவிர பழமையாக இந்து கோயில்களும், பள்ளிவாசல்களும் வாணியம்பாடி தொகுதியில் அமைந்துள்ளன.

தொழில் வளம் மிக்க வாணியம்பாடியில் விவசாயத்தை பொருத்தவரை தென்னை, நெல் சாகுபடி அதிகமாக இருக்கிறது. பீடி சுற்றுதல், பாய் பின்னுதல், லுங்கி நெய்தல் போன்றவை முக்கிய தொழில்களாக விளங்கி வருகிறது. இதுதவிர தோல் தொழிலில் வாணியம்பாடி இந்திய அளவில் இடம் பிடித்துள்ளது சிறப்பம்சமாகும்.

தனியார் பொறியில் கல்லூரி, கலை மற்றும் அறியவில் கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் வாணியம்பாடி தொகுதியில் இருந்தாலும், அரசு கல்லூரி இங்கு இல்லாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.அதேபோல், வாணியம்பாடி நகர் பகுதியில் அரசு பள்ளி அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

வாணியம்பாடி தொகுதி வளர்ச்சிக்காக இதுவரை எந்த சட்டப்பேரவை உறுப்பினரும் முயற்சி எடுக்கவில்லை என்றே மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட நெக்னாமலைப்பகுதியில் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மலைவாழ் மக்களின் 40 ஆண்டுகளான கோரிக்கை, கிடப்பிலேயே உள்ளது. வாணியம்பாடி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், வளையாம்பட்டு அருகே கொட்டப்படுகிறது.

இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று அபாயம் உள்ளது. இதை தடுக்க ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

செப்பனிடாத சாலைகள், எரியாத மின்விளக்குகள், பாலாற்றில் கலக்கப்படும் தோல் கழிவுநீர், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவு படுத்தாத பேருந்து நிலையம், நெரிலான போக்குவரத்து, ரூ.3 கோடியில் கட்டப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையம் என அடுக்கடுக்கான பிரச்சினைகளை வாணியம்பாடி தொகுதி தாங்கியுள்ளது மக்களுக்கு வேதனையளிக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல்பாஷித் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கோ.வி.சம்பத்குமார் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.நீலோபர் கபீல்

அதிமுக

2

சையத் பாரூக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

3

சி.ஞானசேகரன்

தமாகா

4

இரா.கிருபாகரன்

பாமக

5

ஜி.வெங்கசேடன்

பாஜக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வாணியம்பாடி வட்டம் (பகுதி)

தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள்.

உதயேந்திரம் (பேரூராட்சி), ஜாபராபாத் (சென்சஸ் டவுன்), வாணியம்பாடி (நகராட்சி) மற்றும் வார்ப்புரு:ஆலங்காயம் (பேரூராட்சி). வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,695

பெண்

1,11,574

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,23,284

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

A. K.ஹனுமந்தராயகவுண்டர்

சுயேச்சை

1957

A. A. ரசீது

காங்கிரஸ்

1962

M. P. வடிவேல்

திமுக

1967

ராஜமன்னார்

காங்கிரஸ்







1971

அப்துல் லத்தீப்

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்

1977

அப்துல் லத்தீப்

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்

1980

N.குலசேகரபாண்டியன்

அதிமுக

1984

H. அப்துல் மஜீது

இந்திய தேசிய காங்கிரஸ்

1989

P. அப்துல் சமது

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் லத்தீப் அணி

1991

E. சம்பத்

இந்திய தேசிய காங்கிரஸ்

1996

அப்துல் லத்தீப்

இந்திய தேசிய லீக்

2001

அப்துல் லத்தீப்

இந்திய தேசிய லீக்

2006

H. அப்துல்பாசித்

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்

2006 சட்டமன்ற தேர்தல்

47. வாணியம்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

H. அப்துல் பாசித்

தி.மு.க

69837

2

K. முகமத் அலி

அ.தி.மு.க

45653

3

K. அன்வர்- உல்-ஹக்

தே.மு.தி.க

9937

4

N. ராதாகிருஷ்ணன்

சுயேச்சை

2218

5

K. ஆனந்தன்

பி.ஜே.பி

1821

6

G.S. ஜெய்சங்கர்

எ.பி.எச்.எம்

770

7

P. ராஜேந்திரன்

பி.எஸ்.பி

535

8

M. நாகப்பன்

சுயேச்சை

376

9

சையத் மரூஃப் அகமத்

சுயேச்சை

213

131360

2011 சட்டமன்ற தேர்தல்

47. வாணியம்பாடி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான் வாக்குகள்

1

கோவி. சம்பத்குமார்

அ.தி.மு.க

80563

2

அப்துல் பாசித்

தி.மு.க

62338

3

முகமத் இலியாஸ்

சுயேச்சை

2548

4

வசீர் அகமத் .J

பிஎஸ்பி

1149

5

அப்துல் வாகீத் .P

சுயேச்சை

807

147405


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்