இந்தியாவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொகுதியாக ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி இருக்கிறது. முழுக்க முழுக்க தொழில் நகரம் என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து பெற்ற பெல் தொழிற்சாலை மற்றும் அதைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள், நூற்றாண்டு புகழ் வாய்ந்த பாரி பீங்கான் தொழிற்சாலை, சாமே டிராக்டர் தொழிற்சாலை, சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொகுதியாக இருக்கிறது.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி இந்தத் தொகுதி அமைந்துள்ளதால் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
18-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகரம் ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக இருந்துள்ளது. செஞ்சிக் கோட்டையை மீது ஆற்காடு நவாப்புகள் நடத்திய படையெடுப்பில் ராஜா தேசிங்கு வீரமணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது தேங்கு ராஜாவின் மனைவி உடன் கட்டை ஏறினார். இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான், ராணியின் நினைவாக ஆற்காட்டின் மறுகரையில் ராணிப்பேட்டை என்ற நகரை உருவாக்கினார் என்ற வரலாறும் உள்ளது.
இந்தியாவில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கியது வரலாற்று நிகழ்வாக இருக்கிறது.
1866-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்ட வாலாஜா இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய நவ்லாக் தென்னைப் பண்ணை, புகழ்பெற்ற கால்நடை மருந்து ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை தொகுதியின் அடையாளங்கள்.
வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் மேல் விஷாரம் நகராட்சி, வாலாஜா ஒன்றியத்தில் 36 கிராம ஊராட்சிகள், ஆற்காடு ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகள் மற்றும் அம்மூர் பேரூராட்சி இடம் பெற்றுள்ளது.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் தோல் கழிவால் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசு, பாலாற்றில் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும். மூடப்பட்ட தமிழ்நாடு குரோமிய தொழிற்சாலையில் தேங்கிய கழிவுகளை அகற்ற வேண்டும்.
உப்புத்தன்மை அதிகமாக காணப்படும் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். மாசடைந்த நிலத்தை உயிரி வேதியியல் முறையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள பழைய கட்டிடத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை, வன்னிவேடு ஏரியில் கலக்கும் வாலாஜா கழிவுநீருக்கு முற்றுப்புள்ளி வைக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
1952-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் மற்றும் 14 பொதுத் தேர்தல் என 15 தேர்தல்களை ராணிப்பேட்டை தொகுதி சந்தித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 3 முறை, திமுக 5, அதிமுக 4, சுயேட்சைகள் 2 முறை வெற்றிபெற்றுள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.காந்தி, அதிமுக வேட்பாளர் முஹ்மது ஜானிடம் தோல்வி அடைந்தார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
சி.ஏழுமலை
அதிமுக
2
ஆர்.காந்தி
திமுக
3
எஸ்.நித்தியானந்தம்
தேமுதிக
4
எம்.கே.முரளி
பாமக
5
வி.நாகராஜ்
பாஜக
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வாலாஜா வட்டம் (பகுதி)
படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.
அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,20,650
பெண்
1,26,719
மூன்றாம் பாலினத்தவர்
-
மொத்த வாக்காளர்கள்
2,47,369
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 – 2006 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
காதர் செரிப்
காங்கிரஸ்
17934
38.65
1957
சந்திரசேகர நாயக்கர்
காங்கிரஸ்
12386
33.63
1962
அப்துல் கலீல்
திமுக
24082
39.32
1967
எ. ஜி. சாகிப்
சுயேச்சை
30011
45.14
1971
கே. எ. வகாப்
சுயேச்சை
36357
53.96
1977
துரைமுருகன்
திமுக
31940
43.53
1980
துரைமுருகன்
திமுக
44318
53.7
1984
எம். கதிர்வேலு
காங்கிரஸ்
56068
55.6
1989
ஜெ. கஸ்சய்ன்
சுயேச்சை
27724
30.08
1991
என். ஜி. வேணுகோபால்
அதிமுக
65204
53.29
1996
ஆர். காந்தி
திமுக
71346
50.8
2001
எம். எஸ். சந்திரசேகரன்
அதிமுக
83250
56.37
2006
ஆர். காந்தி
திமுக
92584
---
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
முனுசாமி கவுண்டர்
காமன் வீல் கட்சி
10983
23.67
1957
ஆர். எ. சுபன்
சுயேச்சை
10759
29.22
1962
சந்திரசேகர நாயக்கர்
காங்கிரஸ்
23218
37.91
1967
எஸ். கே. செரிப்
காங்கிரஸ்
28953
43.55
1971
எ. ஜி. அரங்கநாத நாயக்கர்
நிறுவன காங்கிரஸ்
31022
46.04
1977
கே. எ. வகாப்
சுயேச்சை
16643
22.68
1980
என். ரேணு
அதிமுக
37064
44.91
1984
அப்துல் ஜாபார்
திமுக
33337
33.06
1989
எம். குப்புசாமி
திமுக
23784
25.8
1991
எம். அப்துல் லத்தீப்
திமுக
32332
26.42
1996
எம். மாசிலாமணி
அதிமுக
37219
26.5
2001
ஆர். காந்தி
திமுக
58287
39.47
2006
ஆர். தமிழரசன்
அதிமுக
60489
---
2006 சட்டமன்ற தேர்தல்
41. ராணிப்பேட்டை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R. காந்தி
தி.மு.க
92584
2
R. தமிழ் அரசன்
அ.தி.மு.க
60489
3
N. பாரி
தே.மு.தி.க
9058
4
K. சக்திவேல்நாதன்
சுயேச்சை
1687
5
R. ராஜேஷ்குமார்
சுயேச்சை
1618
6
V. குப்புசாமி
பி.ஜே.பி
1598
7
S. தமிழரசன்
சுயேச்சை
435
8
M. நாகரத்தினம்
சுயேச்சை
312
9
K. ஆறுமுகம்
சுயேச்சை
286
10
A. சுந்தரவதனம்
சுயேச்சை
246
168313
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல்
41. ராணிப்பேட்டை
வ எண்
வேட்பாளர்கள்
கட்சி
வாக்குகள்
1
முஹம்மத் ஜான்
அ.தி.மு.க
83834
2
ஆர். காந்தி
தி. மு. க
69633
3
R. முருகன்
சுயேட்சை
1213
4
S. சசிகுமார்
பிஎஸ்பி
842
5
பாட்சிமணி
எ.ஐ.ஜே.எம்.கே
662
6
பிரகாசம் .R
சுயேச்சை
375
7
M.V. ராஜன்
புபா
342
8
மணி
சுயேச்சை
301
9
G. காந்தி
சுயேச்சை
185
10
V. சுப்பரமணி
சுயேச்சை
146
11
R. அருள்
சுயேச்சை
112
12
K. சக்திவேல்நாதன்
சுயேச்சை
104
157749
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago