45 - கீழ்வைத்தனன் குப்பம் (தனி)

By செய்திப்பிரிவு

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. மோர்தானா அணைதான் தொகுதியின் அடையாளமாக இருக்கிறது. நகராட்சி, பேரூராட்சி என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட மிக மிக பின்தங்கி தொகுதியாகும்.

இந்த தொகுதி மக்களுக்கு வடுகன்தாங்கல் மற்றும் லத்தேரியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். வேலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்திய காவிரி குடிநீர் திட்டத்தில் புறக்கப்பட்ட கே.வி.குப்பம் ஒன்றியத்தை இணைக்க வேண்டும். கே.வி.குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

மோர்தானா அணையில் இருந்து ராஜாதோப்பு அணைக்கு கட்டப்பட்ட கால்வாயை சரி செய்து வேப்பனேரி, பில்லாந்திப்பட்டு, சின்ன வடுகன்தாங்கல், வடுகன்தாங்கல், பி.என்.பாளையம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் திட்டங்கள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு சிறப்பு திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

2011-ல் முதல் தேர்தலை கே.வி.குப்பம் (தனி) சந்தித்தது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் முதல் சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஜி.லோகநாதன்

அதிமுக

2

வி.அமலு

தி.மு.க

3

எம்.தேவியம்மாள்

தேமுதிக

4

சி.குசலகுமாரி

பாமக

5

ஆர்.விமலா

பாஜக

6

என்.அர்ச்சனா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

குடியாத்தம் வட்டம் (பகுதி) தணகொண்டப்பள்ளி, விலுதோனபாளையம், தட்சிணபதபாளையம், ரெங்கசமுத்திரம், பரதராமி, புட்டவாரிபள்ளி, செங்குன்றம், கோடிகுப்பம், தட்டப்பாறை, சின்னாளபள்ளி, முக்குன்றம், பாக்கம், ராமாலை, தத்திமாணபள்ளி, கல்லபாடி, கொண்டசமுத்திரம், பிச்சனூர், ராஜகுப்பம், நெல்லூர்பேட்டை, செருவங்கி, தாழையாத்தம், செதுக்கரை, மேலாலத்தூர், மேல்முட்டுக்கூர், செட்டிக்குப்பம், போஜனபுரம், செம்பேடு, சிங்கல்படி, கூடநகரம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம், பட்டு, ஒலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள்.

காட்பாடி வட்டம் (பகுதி), தொண்டாந்துளசி, செஞ்சி, பனமடங்கி, மாளியப்பட்டு, மேல்மாங்குப்பம், மேல்மாயில், கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, அரும்பாக்கம், லத்தேரி, விளுந்தக்கல், ஜாபராபேட்டை, வஞ்சூர், ஒழையாத்தூர், அனங்குடி, பொம்மிநாயக்கன்பாளையம், அங்காரன்குப்பம், அலங்கனேரி, முருக்கம்பட்டு, காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், சேத்துவண்டை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர், சென்னாங்குப்பம், மாச்சனூர், பழையகிருஷ்ணாபுரம், காவனூர், கீழ்வைத்தியணான்குப்பம், வேப்பங்கணேரி, துத்திதாங்கல், மேல்விலாச்சூர், பில்லாந்திபட்டு, மேலூர், கீழுர், முதினாம்பட்டு, கீழ்விலாச்சூர், வடுகன் தாங்கல், விக்ரமாச்சி, வேலம்பட்டு, வாழ்வான்குன்றும், வடவிரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், சோழமூர் மற்றும் திருமணி கிராமங்கள்



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,762

பெண்

1,03,536

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,05,299

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

45. கீழ்வைத்தனன்குப்பம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

செ. கு. தமிழரசன்

அ.தி.மு.க

72002

2

K. சீத்தாராமன்

தி.மு.க.

62242

3

S. அனுமந்தன்

சுயேச்சை

1350

4

B. சரவணன்

பி.எஸ்.பி

1226

5

N. இளையகுமார்

ஐ.ஜே.கே

1111

6

M. ரவி

சுயேச்சை

1061

7

S. ரமேஷ்

சுயேச்சை

592

8

தமிழ் அரசன்

சுயேச்சை

454

9

S. சுதாகர்

சுயேச்சை

370

10

C. சந்தரன்

எல்.ஜே.பி

257

11

M. சங்கர்

சுயேச்சை

183

140848


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்