வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பத்தூர் ஒன்றாகும். மக்களவை தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக திருப்பத்தூர் இருந்தாலும், சட்டப்பேரவை தொகுதியில் வேலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில், மாடப்பள்ளி, கும்மிடிகான்பேட்டை, நரியநேரி, லக்கிநாயக்கன்பட்டி, கசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், புங்கம்பட்டுநாடு, புதூர்நாடு, பொம்மிக்குப்பம், மோட்டூர் மட்றப்பள்ளி, கொரட்டி, சுந்தரம்பள்ளி, குரும்பேரி, கோனேரிக்குப்பம், கருங்கல்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், செவ்வாத்தூர், புதுப்பட்டி, குனிச்சி, மாம்பாக்கம், நெல்லிவாசல்நாடு, சிங்காரப்பேட்டை போன்ற கிராமங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
1951-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு வரும் திருப்பத்தூர் தொகுதியில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் தலா 2 முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக திருப்பத்தூர் உள்ளது. கடந்த 1911-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பில், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை அலுவலகங்கள், வனத்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலைகள் திருப்பத்தூரை யொட்டியுள்ளது. திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் திருப்பத்தூரை தனி மாவட்டமாக உருவெடுக்க முயற்சி எடுப்பேன் என கூறுவதோடு சரி, வெற்றிக்கு பிறகு யாரும் இதை பற்றி கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை இருக்கிறது. திருப்பத்தூரை யொட்டியுள்ள நாட்றம்பள்ளியை தனி தாலுகாவாக தமிழக அரசு அறிவிக்கும்போது திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தொகுதி மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், இன்று வரை அதற்கான அறிவிப்பு வெளியாகாதது தொகுதி மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் திருப்பத்தூர் உள்ளதால், இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். திருப்பத்தூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது.
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் பாமக உறுப்பினர். டி.கே.ராஜாவும், கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் வெற்றிப்பெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
டி.டி.குமார்
அதிமுக
2
ஏ.நல்லதம்பி
தி.மு.க
3
எம்.கே.அரிகிருஷ்ணன்
தேமுதிக
4
டி.கே.ராஜா
பாமக
5
கோவிந்தராஜன்
பாஜக
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருப்பத்தூர் வட்டம் (பகுதி)
தாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,12,216
பெண்
1,12,521
மூன்றாம் பாலினத்தவர்
12
மொத்த வாக்காளர்கள்
2,24,749
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2006 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
ஆண்டு
1951
ஈ. எல். இராகவ முதலியார்
சுயேச்சை
20918
48.75
1951
1957
ஆர். சி. சமண்ண கவுண்டர்
காங்கிரஸ்
18618
64
1957
1962
கே. திருப்பதி கவுண்டர்
திமுக
32400
62.38
1962
1967
சி. கவுண்டர்
திமுக
32589
49.8
1967
1971
ஜி. இராமசாமி
திமுக
37120
55.54
1971
1977
பி. சுந்தரம்
திமுக
19855
27.29
1977
1980
பி. சுந்தரம்
திமுக
42786
54.74
1980
1984
ஒய். சண்முகம்
காங்கிரஸ்
46884
49.02
1984
1989
பி. சுந்தரம்
திமுக
40998
35.92
1989
1991
எ. கே. சி. சுந்தரவேல்
அதிமுக
69402
62.24
1991
1996
ஜி. சண்முகம்
திமுக
66207
53.44
1996
2001
டி. கே. இராசா
பாமக
59840
46.15
2001
2006
டி. கே. இராசா
பாமக
71932
---
2006
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
ஆர். சி. சமண்ண கவுண்டர்
காங்கிரஸ்
15901
37.06
1957
நடேச பிள்ளை
சுயேச்சை
6609
22.72
1962
ஆர். சி. சமண்ண கவுண்டர்
காங்கிரஸ்
19540
37.62
1967
சண்முகம்
காங்கிரஸ்
30512
46.62
1971
ஒய். சண்முகம்
ஸ்தாபன காங்கிரஸ்
29720
44.46
1977
கே. ஜெயராமன்
அதிமுக
18857
25.92
1980
ஜி. இராமசாமி
அதிமுக
34682
44.37
1984
பி. சுந்தரம்
திமுக
28781
30.09
1989
எசு. பி. மணவாளன்
காங்கிரஸ்
27541
24.13
1991
பி. சுந்தரம்
திமுக
33498
30.04
1996
பி. ஜி. மணி
அதிமுக
34549
27.89
2001
எசு. அரசு
திமுக
54079
41.7
2006
கே. சி. அழகிரி
மதிமுக
58193
---
2006 சட்டமன்ற தேர்தல்
50. திருபத்த்துர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
T.K. ராஜா
பாமக
71932
2
C. அழகிரி
ம.தி.மு.க
58193
3
B.S. செந்தில்குமார்
தே.மு.தி.க
9435
4
D. சிவசண்முகம்
பிஜேபி
2229
5
D.N. அமுதநாதன்
சுயேச்சை
1718
6
E. மணி
சுயேச்சை
1297
7
H. கோபிநாதன்
எஸ்.பி
1026
8
T.R. சரவணன்
பிஎஸ்பி
897
9
N. சேகர்
சுயேச்சை
625
10
P. தங்கராஜ்
சுயேச்சை
412
147764
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல்
50. திருபத்த்துர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K.G. ரமேஷ்
அ.தி.மு.க
82895
2
S. ராஜேந்திரன்
தி.மு.க
61103
3
M. செல்வகுமார்
பிஎஸ்பி
1087
4
D. குபேந்தரன்
சுயேச்சை
1006
5
K. வெங்கடேசன்
சுயேச்சை
843
6
K. காமராஜ்
ஐ.ஜே.கே
740
7
T.P.ஆசைதம்பி
பிஎஸ்பி
543
8
T.P. ரமேஷ்
சுயேச்சை
442
9
S. சங்கர்
சுயேச்சை
382
10
K.V. ரமேஷ்
சுயேட்சை
288
11
M. திருமால்
எல்.எஸ்.பி
278
12
M. முண்ணா
சுயேச்சை
262
153391
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago