216 - ஸ்ரீவைகுண்டம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் விளங்குகிறது. தாமிரபரணி நதிக்கரை அமைந்துள்ள இந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றது. நவதிருப்பதி, நவகைலாயம் போன்ற ஆன்மீக ஸ்தலங்கள் இந்த தொகுதியில் உள்ளன.

தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளதால் இந்த தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர். ஏ.பி.சி. வீரபாகு, சி.பா. ஆதித்தனார் போன்ற முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால் அந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. சாத்தான்குளம் தாலுகா முழுவதும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுகாக்களில் பகுதியளவு இந்த தொகுதியில் உள்ளன. சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குள், ஏரல், ஆழ்வார்திருநகரி போன்ற பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

விவசாயிகளை அதிகம் கொண்ட தொகுதி என்பதால் இங்குள்ள பிரச்சினைகளும் விவசாயம் சார்ந்ததே ஆகும். ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்று, பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்பது விவசாயிகளின் புகார். ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொண்டு குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும். மருதூர் அணையை தூர்வார வேண்டும்.

இந்த பகுதியில் வாழை விவசாயம் அதிகம். வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனைபடுகின்றனர். எனவே, வாழைக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தாயரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். தாமிரபரணியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன போன்றவை இத்தொகுதி மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகும்.

இந்த தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2009 இடைத்தேர்தலையும் சேர்த்து இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. இதில் 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி. வீரபாகு வென்றுள்ளார். அடுத்ததாக அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளது. 1967, 1971 தேர்தல்களில் திமுக சார்பில் சி.பா. ஆதித்தனார் இத்தொகுதியில் வென்றுள்ளார். 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி. சண்முகநாதன் 21,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 69,708 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுடலையாண்டி 48,586 வாக்குகளை பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

சாத்தான்குளம் தாலுகா

ஸ்ரீவைகுண்டம் தாலுகா (பகுதி)

ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர், கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள், சாயர்புரம் (பேரூராட்சி), திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி) மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள், ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,02,651

பெண்

1,04,706

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,07,363



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

எஸ்.பி. சன்முகாநந்தன்

அ.தி.மு.க

2009 இடைத்தேர்தல்

எம்.பி.சுடலையாண்டி

இ.தே.கா

60.78

2006

D.செல்வராஜ்

இ.தே.கா

40.78

2001

S.P.சண்முகநாதன்

அதிமுக

46.58

1996

S.டேவிட் செல்வின்

திமுக

42.57

1991

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

62.54

1989

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

34.12

1984

S.டேனியல் ராஜ்

இ.தே.கா

53.76

1980

E.ராமசுப்பிரமணியன்

அதிமுக

38.99

1977

K.செல்வராஜ்

அதிமுக

31.29

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D. செல்வராஜ்

காங்கிரஸ்

38188

2

S.P. சண்முகநாதன்

அ.தி.மு.க

36556

3

E. அதிசயகுமார்

பி.ஸ்.பி

9324

4

C. சத்தியசீலன்

தே.மு.தி.க

3166

5

P.M. பால்ராஜ்

பி.ஜே.பி

2719

6

S. பெட்ரிக் ஸ்டான்லி

பார்வர்டு பிளாக்

2136

7

E. ஜார்ஜ் பென்னி

சுயேச்சை

719

8

N. ராஜகோபாலன்

சுயேச்சை

370

9

S. தங்கபாண்டி

எஸ்.பி

193

10

A. அய்யப்பன்

டி.என்.ஜே.சி

151

11

G. குமார்

எல்.ஜே.பி

121

93643

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.P. சண்முகநாதன்

அ.தி.மு.க

69708

2

M.B. சுடலையாண்டி

காங்கிரஸ்

48586

3

S. சுடலைமணி

ஜே.எம்.எம்

6033

4

S. செல்வராஜ்

பி.ஜே.பி

4125

5

H.M. முகமது யூசுப்

எ.ஐ.எம்.எப்

1303

6

N. சரவணன்

சுயேச்சை

1255

7

K. சின்னதுரை

எபிஎம்

869

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்