தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி மாவட்டத்தின் தலைநகரம். 1952-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட பழமையான தொகுதி. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை முழுமையாக உள்ளடக்கி இந்த தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுக நகரமாகும். நாட்டில் உள்ள பெரும் துறைமுங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் இருப்பதால் தொழில் நகரமாக உள்ளது. பல தொழிற்சாலைகள் தூத்துக்குடி தொகுயில் அமைந்துள்ளன. உப்பளத் தொழில், மீன்பிடித் தொழில் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் தூத்துக்குடி உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இங்கே வாழ்கின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதாலும், துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் அதிகம் இருப்பதாலும் தென் மாவட்டங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி.
தூத்துக்குடி தொகுதியில் பிரதான பிரச்சினை என்றால் தூத்துக்குடி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி தான். மாநகராட்சி அந்தஸ்து பெற்றும் அதற்கான வசதிகள் வரவில்லை.
தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் முடியாமல் இருப்பது பெரும் குறையாக இருந்து வருகிறது. தூத்துக்குடி ஒருங்கிணைந்த பஸ் நிலையம், 4-வது பைப்லைன் குடிநீர் திட்டம், விவிடி சந்திப்பு மேம்பாலம், 1-ம் கேட், 2-ம் கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திட்டம் போன்றவை தமிழக முதல்வரால் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர் தொகுதி மக்கள்.
1952 முதல் இதுவரை 14 தேர்தல்களை தூத்துக்குடி தொகுதி சந்தித்துள்ளது. இதில் 6 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.த. செல்லப்பாண்டியன் 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 89,010 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன் (திமுக) 62,817 வாக்குகளை பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தூத்துக்குடி தாலுக்கா (பகுதி) - தூத்துக்குடி, மீளவிட்டான் மற்றும் முள்ளக்காடு கிராமங்கள், தூத்துக்குடி நகராட்சி, முத்தையாபுரம் (சென்சஸ் டவுன்).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,34,431
பெண்
1,38,517
மூன்றாம் பாலினத்தவர்
32
மொத்த வாக்காளர்கள்
2,72,980
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2006
P.கீதா ஜீவன்
திமுக
50.7
2001
S.ராஜம்மாள்
அதிமுக
51.4
1996
N.பெரியசாமி
திமுக
38.16
1991
V.P.R.ரமேஷ்
அதிமுக
66.09
1989
N.பெரியசாமி
திமுக
31.9
1984
S.N.இராஜேந்திரன்
அதிமுக
56.54
1980
S.N.இராஜேந்திரன்
அதிமுக
57.61
1977
N.தனசேகரன்
அதிமுக
29.29
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
P. கீதா ஜீவன்
தி.மு.க
79821
2
S. டேனியல்ராஜ்
அ.தி.மு.க
64498
3
G.V. பீட்டர்ராஜ்
தே.மு.தி.க
7572
4
T. சிவமுருகன்
பி.ஜே.பி
1788
5
T. காசிபாண்டியன்
பி.எஸ்.பி
1266
6
M. சரவணமுத்து
பார்வர்டு பிளாக்
1007
7
V. ராம்குமார்
சுயேச்சை
406
8
A. முருகன்
சுயேச்சை
203
9
V. நாகராஜன்
ஜே.டி
161
10
P. சங்கரலிங்கம்
சுயேச்சை
160
11
B. ஜெயமால் அற்புதராஜ்
ஆர்.எல்.டி
126
12
A. ஆறுமுகநாயனார்
சுயேட்சை
117
13
J. பம்பாய்தாசன்
ஐ.ஜே.பி
116
14
M. கார்த்திகேயன்
சுயேச்சை
109
15
S. ஞானதுரை
சுயேச்சை
96
157446
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S.T. செல்லபாண்டியன்
அ.தி.மு.க
89010
2
P. கீதா ஜீவன்
தி.மு.க
62817
3
V. வெங்கடேஷ்
ஜே.எம்.எம்
1025
4
J. பென்னிட்
பி.எஸ்.பி
722
5
L. ஆழ்வார் கார்த்திகேயன்
சுயேச்சை
634
6
V. நாகராஜன்
ஜே.டி
573
7
V. ராம்குமார்
சுயேட்சை
502
8
A. ஆதிநாராயணன்
எல்.எஸ்.பி
463
9
A. முருகன்
சுயேச்சை
304
10
M. ராஜாரத்தினம்
சுயேச்சை
298
11
P. சிவலிங்கம்
சுயேச்சை
123
12
M. இலையப்பெருமாள்
சுயேச்சை
105
13
S. பிரபாகரன்
சுயேச்சை
100
14
J.சாமுவேல்
சுயேச்சை
98
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago