திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி தஞ்சை - திருவாரூர் மாவட்டத்திற்கு இடையே மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் மன்னார்குடி நகராட்சி, நீடாமங்கலம் பேரூராட்சி, மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 101 ஊராட்சி மன்றங்கள் தவிர கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துக்களும் அடங்கியுள்ளன.
வாக்காளர் எண்ணிக்கை மொத்தவாக்காளர் எண்ணிக்கை 2,40,899 அதில் ஆண்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 176, பெண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 721.
மன்னார்குடி நகரம் அரசியலிலும், ஆன்மிகத்திலும் தனி சிறப்பு பெற்ற நகரம், சைவ சமயத்தை முன்னிருத்திய சோழமன்னர்கள் ஆண்ட இப்பகுதியில் ஏராளமான சிவாலயங்கள் இருந்த போதிலும் பிரதான கோயிலாக ராஜகோபாலசுவாமி என்ற வைணவக்கோயில் சிறந்து விளங்குகிறது. இந்த கோயிலின் தனிசிறப்பு என்னவென்றால் துவாபர யுகத்தில் தோன்றிய கிருஷ்ணன் இரண்டு முனிவர்களுக்கு காட்சி தருவதற்காக தென்துவாரகை என்று சொல்லப்பட்ட தற்போதைய மன்னார்குடி நகரத்தில் எழுந்தருளினார் என்கிற தனி சிறப்பு கொண்டதால் ஆன்மீகத்தில் சிறப்புபெற்ற நகரம் கருதப்படுகிறது.
அதுபோல ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மண்டலத்தில் சுதந்திரபோராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீறு கொண்ட நகரமாக விளங்கிய மன்னார்குடி நகரத்தில் ரயில்வே நிலையம், நகராட்சி ஆகியவற்றை ஆங்கில அரசுக்கு எதிராக அடித்து உடைத்து சுதந்திரத்தை பெற போராடிவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருந்ததை குறிப்பிட்டு தென்னகத்தின் பர்தோலி என பாராட்டப்பட்ட நகரம்.
மாஸ்கோவில் மழைபெய்தால் மன்னார்குடியில் குடைபிடிப்பார்கள் என்று சொல்கின்ற அளவிற்கு இடதுசாரி இயக்கம் ஆழமாக வேரூன்றிய பகுதி. மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட தென்பரையில் இடதுசாரி இயக்கத்தை சேர்ந்த தென்பரை சிவராமன் என்பவர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை தொடங்கினார். இதுதான் தொழிற்சங்கத்திற்கொல்லாம் மூலாதாரமாக விளங்கியது.
தமிழர்களுக்கு பகுதறிவு வழியில் நின்று சுயமரியாதை உணர்வையூட்டிய தந்தை பெரியார், சிங்காரவேலருடன் இணைந்து சமஉரிமை மாநாடு மன்னார்குடியில் தான் நடத்தினார். தந்தை பெரியாரின் பேராட்ட வாழ்க்கையில் அவர் அறிவித்து நடத்தி முடிக்காமல் விட்ட ஒரே போராட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆலயநுழைவு போராட்டம்.
இந்த மன்னார்குடி நகரத்தில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பேரறிஞர் அண்ணா தற்போதை திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு ஒருபாதியை நான் முடித்தேன் மற்றொரு பாதியை தம்பி கருணாநிதி தொடருவார் என கூறி திமுக தலைவராக கருணாநிதி வருவார் என்று அடையாளம் காட்டிய நகரமாக திமுகவினரால் போற்றப்படுகின்ற ஊர் மன்னார்குடி.
இப்படிப்பட்ட மன்னார்குடிக்கு பிரதானமான தொழில் விவசாயம் தான் எனவே இந்த தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தான்.
2011 டி.ஆர்.பி.ராஜா (திமுக)
மன்னார்குடி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் 3 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு:
மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இங்கு தஞ்சை - நாகை சாலையில் தொடர்ச்சியாக நான்கு ரயில்வே கேட்டுகள் இருப்பதால் ரயில் வரும் நேரங்களில் தொடர்ந்து கேட்டுகள் மூடப்படுவதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகா நான்கு கேட்டுகளிலும் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்ற உடனடியாக பைபாஸ் சாலை அமைக்க வேண்டும்.
மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் விவசாயத்தை தவிர வேறெந்த தொழிலும் இல்லை. இந்த சூழ்நிலையில் இந்த தொகுதியில் படித்த கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மன்னார்குடி நகரத்தில் சிப்காட் தொழிற்சாலை வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் கிடப்பில் உள்ளதை செயல்படுத்த வேண்டும்.
பறவைகள் சரணாலயமாக விளங்கும் வடுவூர் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை செயல்படுத்தி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு சவாரிகள் ஏற்படுத்திட வேண்டும்..
அதுபோல் இந்த தொகுதியில் இருக்கின்ற ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கும், பாலிடெக்னிக் படிப்பிற்கும் அருகில் இருக்கும் தஞ்சாவூரை நம்பியே இருக்கின்றனர். மன்னார்குடி சட்டமன்றத்தொகுதியில் அரசு தொழில்நுட்ப கல்லூரி வரவேண்டும்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு மன்னார்குடிக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில் சேவையையொட்டி எந்த ஒரு தொழில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மன்னார்குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதையை ஏற்படுத்திட வேண்டும். மன்னார்குடி சட்ட மன்ற தொகுதிக்கு வேளாண் தொழில் நுட்ப கல்லூரி வரவேண்டும். பாரம்பரியம் மிக்க மன்னார்குடி நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும்.
சிறப்பம்சங்கள்:
வடுவூரில் மத்திய அரசு பங்களிப்புடன் கூடிய ரூ. 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மின்னொளி உள் விளையாட்டு அரங்கம்.
வடூவூர் கோதண்டராமர் சுவாமி திருக்கோயில், மன்னார்குடியிலிருந்து திருப்பதி, சென்னை, கோவை, ஜோத்பூருக்கு விரைவு ரயில் வசதி.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எஸ்.காமராஜ்
அதிமுக
2
டிஆர்பி.ராஜா
திமுக
3
ஏ.முருகையன்பாபு
தேமுதிக
4
எஸ்.பாலசுப்பிரமணியன்
பாமக
5
பி. சிவகுமார்
பாஜக
6
இ.பாலமுருகன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நீடாமங்கலம் வட்டம் (பகுதி)
கோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள்,
நீடாமங்கலம் (பேரூராட்சி),
மன்னார்குடி வட்டம் (பகுதி)
கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம் மற்றும் எளவனூர் கிராமங்கள்,
மன்னார்குடி (நகராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,18,926
பெண்
1,22,318
மூன்றாம் பாலினத்தவர்
3
மொத்த வாக்காளர்கள்
2,41,247
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1952
சுப்பையா மற்றும் எம்.கந்தசாமி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1957
தி.எஸ்.சுவாமிநாதஉடையார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1962
தி.எஸ்.சுவாமிநாதஉடையார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1967
தி.எஸ்.சுவாமிநாதஉடையார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1971
கே.பாலகிருஷ்ணன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1977
மு.அம்பிகாபதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1980
மு.அம்பிகாபதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984
எஸ்.ஞானசுந்தரம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989
கே.ராமச்சந்திரன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1991
கே.சீனிவாசன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996
வை.சிவபுண்ணியம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2001
வை.சிவபுண்ணியம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2006
வை.சிவபுண்ணியம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2011
டி.ஆர்.பி.ராஜா
திராவிட முன்னேற்றக் கழகம்
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
V. சிவபுண்ணியம்
சி.பி.ஐ
68144
2
R. காமராஜ்
அ.தி.மு.க
61186
3
N. முத்தையா
தே.மு.தி.க
4500
4
K. கல்யாணராமன்
பி.ஜே.பி
1894
5
V. முத்துலிங்கம்
சுயேச்சை
836
6
A. நாகூர்கனி
சுயேச்சை
685
7
K. குருசாமி
சுயேச்சை
653
137898
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
T.R.B. ராஜா
தி.மு.க
81320
2
ராஜாமாணிக்கம் சிவா
அ.தி.மு.க
77338
3
M. ஜெயசந்திரன்
சுயேச்சை
1863
4
P. வாசுதேவன்
பாஜக
1435
5
K. வெற்றிவேல்
சுயேச்சை
924
6
D. அன்புதாஸ்
பகுஜன் சமாஜ் கட்சி
795
7
L. வெங்கடாசலம்
சுயேச்சை
747
8
A.P.A. அப்துல் சமது
சுயேட்சை
540
9
M. லட்சுமி
சுயேச்சை
468
10
K. அரேக்கியசாமி
ஐஜேகே
335
11
R. பிச்சைகண்ணு
சுயேச்சை
184
12
K.S. ராஜா
சுயேச்சை
137
13
S. ராசா
சுயேட்சை
100
166186
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago