திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளை கொண்டதாகும். இதில் திருத்துறைப்புண்டி நகராட்சியில் 32 பஞ்சாயத்தில் 72 கிராமம் உள்ளது. முத்துப்பேட்டை போரூராட்சியில் 29 பஞ்சாயத்து 50 கிராமம் உள்ளது. இதில் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தியத்தில் 35 பஞ்சாயத்தில் 120 கிராமங்களை உள்ளடக்கியது.
வாக்காளர் எண்ணிக்கை மொத்தமாக 2,22,380, இதில் ஆண்கள் 1,10,978. பெண்கள் 1,11,401. திருநங்கை 1.
இந்த திருத்துறைப்பூண்டியின் சிறப்பாக அருள்மிகு பிறவி மருத்தீஸ்வரர் ஆலயம் மற்றும் பொங்கு சனீஸ்வரர் ஆலயம் மேலும் பழமையான லூர்து மாதா ஆலயமும் முத்துப்பேட்டையின் 100 ஆண்டுகள் பழமையான தர்காவும் உள்ளது. மேலும் சுற்றுலாத் தலமாக விளங்கும் அலையாத்தி காடுகள், உதயமார்த்தாண்டபுர பறவைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சட்டப்பேரவை தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவில் வசித்து வருவதால் இது தனிதொகுதியாக இருந்து வருகிறது. இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ள பகுதி டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதியாகும். இங்கு பிராதான தொழிலாக விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலாவே காணப்படுகிறது. இந்த தொகுதியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
ஆகவே இந்த தொகுதியில் சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் விவசாயிகள் மட்டுமே ஆவர். கடந்த கால தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்.
இ.தேசிய காங்கிரஸ் - 1957 (1 முறை), தி.மு.க – 1967 (1 முறை), இ.கம்யூனிஸ்ட் கட்சி – (1962,1971,1977,1980,1984,1989,1991,1996,2001,2006,2011) – 11 முறை வெற்றி பெற்றுள்ளது.
2011-ல் சட்டப்பேரவை தேர்தலில் சிபிஐ சார்பாக உலகநாதனும் காங்கிரஸ் திமுக கூட்டணியின் செல்லதுரையும் போட்டியிட்டனர். இதில் உலகநாதன் வெற்றி பெற்றார்.
சிறப்பம்சங்கள்:
இங்கு ஏழை எளிய மற்றும் பாமர மக்கள் அதிகமாக வசித்து வருவதால் மாணவர்களுக்கு மேல்படிப்பிற்கு பாரதிதாசன் உறுப்பு கல்லூரியை கொண்டு வரப்பட்டது. கொருக்கையில் பல்தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை.
தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி- காரைக்குடி ரயில் அகல பாதை இன்னும் சீரமைக்கப்படவில்லை.
திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முத்துப்பேட்டை தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
விவசாயத் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து தொழிலுக்காக கேராளா மற்றும் திருப்பூருக்கு செல்வதை தடுக்கும் வி்தத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
மழைக்காலங்களில் வெள்ளத் தடுப்புகளை ஏற்படுத்தும் வாய்க்கால்கள், ஆறுகளை சீரமைக்க நிரந்த தீர்வு காண வேண்டும்.
ஊராட்சி தோறும் நூலகம் வேண்டும் என கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இந்த சட்ட மன்றத்தில் வேளாண்மை கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கே.உமாமகேஸ்வரி
அதிமுக
2
பி.ஆடலரசன்
திமுக
3
கே. உலகநாதன்
இந்திய கம்யூ
4
எஸ்.ராஜ்மோகன்
பாமக
5
ஜி. உதயகுமார்
பாஜக
6
ஜெ.எஸ்.சரவணகுமார்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருத்துறைப்பூண்டி வட்டம்
மன்னார்குடி வட்டம் (பகுதி)
ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,10,918
பெண்
1,11,820
மூன்றாம் பாலினத்தவர்
1
மொத்த வாக்காளர்கள்
2,22,739
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1957
வி. வேதய்யன்
காங்கிரஸ்
54049
1962
எ. கே. சுப்பையா
இந்திய பொதுவுடமைக் கட்சி
45148
1967
என். தர்மலிங்கம்
திமுக
23728
1971
சி. மணலி கந்தசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
40714
1977
பி. உத்திராபதி
இந்திய பொதுவுடமைக் கட்சி
43208
1980
பி. உத்திராபதி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
62051
1984
பி. உத்திராபதி
இந்திய பொதுவுடமைக் கட்சி
59834
1989
ஜி. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
49982
1991
ஜி. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
62863
1996
ஜி. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
79103
2001
ஜி. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
73451
2006
கே. உலகானந்தன்
இந்திய பொதுவுடமைக் கட்சி
75371
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1957
எ. வேதரத்தினம்
காங்கிரஸ்
51168
1962
வி. வேதய்யன்
காங்கிரஸ்
35078
1967
கே. சி. மணலி
இந்திய பொதுவுடமைக் கட்சி
22226
1971
பி. சி. வேலாயுதம்
நிறுவன காங்கிரஸ்
17478
1977
என். குப்புசாமி
திமுக
24934
1980
வி. வேதய்யன்
காங்கிரஸ்
39345
1984
ஜெ. அருசுனன்
அதிமுக
49019
1989
என். குப்புசாமி
திமுக
41704
1991
வி. வேதய்யன்
காங்கிரஸ்
50797
1996
கே. கோபாலசாமி
காங்கிரஸ்
25415
2001
எம். பூங்குழலி
திமுக
48392
2006
எ. உமாதேவி
அதிமுக
52665
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. உலகநாதன்
சி.பி.ஐ
75371
2
A. உமாதேவி
அ.தி.மு.க
52665
3
K. மோகன்குமார்
தே.மு.தி.க
5918
4
P. சிவாசண்முகம்
பி.ஜே.பி
2546
5
M. ஜெயகுமார்
என்.சி.பி
844
6
N. ராஜேந்திரன்
பி.ஸ்.பி
497
137841
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. உலகநாதன்
சி.பி.ஐ
83399
2
P. செல்வதுரை
காங்கிரஸ்
61112
3
P. சிவசண்முகம்
பாஜக
3025
4
S. ராஜ்குமார்
சுயேச்சை
1981
5
S. சரவணன்
எல்.எஸ்.பி
1857
6
சிங்கபெருமாள்.
சுயேச்சை
1726
7
தாய். கந்தசாமி
பகுஜன்
1070
8
U. ராமசந்திரன்
சுயேச்சை
898
9
K. கருணாநிதி
சுயேச்சை
715
10
R. தேவதாஸ்
எம்.எம்.கே.ஏ
511
156292
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago