தமிழத்தில் உள்ள விவசாயம் நிறைந்த, முப்போகமும் சாகுபடி செய்யப்பட்ட மாவட்டம் தான் திருவாரூர் மாவட்டம். ஆன்மீகமும், விவசாயமும் ஒன்று சேர செழித்து வளர்ந்த பூமியாகும்.
கடந்த 1997 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 2,374 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடன் திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தனித்தொகுதிகளாக இருந்தது. மறுசீரமைப்புக்கு பின்னர் திருத்துறைப்பூண்டி தொகுதி மட்டுமே தனித்தொகுதியாக உள்ளது.
வலங்கைமான் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டு, அந்த தொகுதிகுட்பட்ட பகுதிகள் நன்னிலம் சட்டமன்ற தொகுதியிலும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமாகும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் போது சராசரியாக 358 மி.மீட்டர் மழையும், வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக 388 மி.மீட்டர் மழையும் பெய்யும் பூமியாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, சோளம், உளுந்து ஆகியவை பயிரிடப்படுகிறது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அதிகம் நிறைந்த மாவட்டமாகவும். ஆண்டுதோறும் நெல் சாகுபடி மட்டும் 15 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்று வரும் பரப்பரளவை கொண்ட பகுதியாகும்.
திருவாரூர் தேரழகு என்பார்கள் அதற்கு ஏற்ற வகையில் இங்குள்ள தியாகராஜசுவாமி கோயில் தேர் தமிழத்திலேயே முதன்மை பெற்று விளங்குகிறது. இந்த தேரின் அழகும், அத்தேர் தெருவில் அசைந்தாடி வரும்போது காண்போரை கண்கொள்ள செய்யும் கொள்ளையழாகும்.
கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, செங்கழுநீர் ஓடை 5 வேலி என்பார்கள் அதற்கு ஏற்றார்போல் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஐந்து, ஐந்து வேலி பரப்பளவை கொண்டது. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், ஷீமாசாஸ்திரிகள் பிறந்த ஊர்.
திராவிட இயக்கம் வேரூன்ரிய பகுதியில் இதுவும் ஒன்றாகும். தன்னுடைய 14 வயதிலேயே திராவிடர் கொள்கையை ஆதரித்து வீதிகளில் போராட துவங்கிய திமுக தலைவர் மு.கருணாநிதி வசித்த ஊராகும். இங்கிருந்து தான் அவர் சென்னைக்கு சென்றார் என்பதால் திருவாரூருக்கு என்றும் திமுக ஆட்சி காலத்தில் தனி மரியாதை உள்ளது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் வசி்த்தாலும், இந்துக்களில் பெரும்பாண்மையாக தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியாகும்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1962 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1967 ல் மார்க்சிஸ்ட்டும், 1971,1977 ல் திமுகவும், 1980, 1984,1989,1991 ஆகிய நான்கு தேர்தலில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது. 1996, 2001, 2006, 2011 ஆகிய பேரவைச் தேர்தலில் திமுக வெற்றி வெற்றுள்ளது. 2011 ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொகுதியின் பிரதான பிரச்சினைகள்: நகரப் பகுதியை உள்ளடக்கிய திருவாரூர் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிமாக இருப்பதாலும், சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணி, நாகூருக்கு மேற்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் திருவாரூர் நகரப் பகுதிக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு திருவாரூரைச் சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும். காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர் வார வேண்டும்.
விவசாயிகளை அதிகம் பாதிக்கிறது என பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வருவதால், ஒஎன்ஜிசி மற்றும் ஷேல் கேஸ் நிறுவனங்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். விவசாயமே பிரதானமாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
சிறப்புகள்: திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகம், திருவாரூர் அரசு மருத்துவமனைக் கல்லூரி, ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியரகம். நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் விளமல் கிராமத்தில் அமைந்துள்ளது.
தொகுதி வாக்காளர்கள் நிலவரம்: 20.1.2016 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, திருவாரூர் தொகுதியில் 1,25,424 ஆண்களும், 1,27,029 பெண்களும், 13 திருநங்கையரும் உள்ளனர்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
அதிமுக
2
மு.கருணாநிதி
திமுக
3
பி.எஸ்.மாசிலாமணி
இந்திய கம்யூ
4
ஆர். சிவக்குமார்
பாமக
5
என். ரெங்கதாஸ்
பாஜக
6
தென்றல் சந்திரசேகரன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருவாரூர் வட்டம்,
குடவாசல் வட்டம்(பகுதி)
காப்பணமங்கலம், அரசவனங்காடு, தீபங்குடி, கீரங்குடி, புலவநல்லூர், வடகண்டம், மண்ணக்கால், எண்கண், காரையப்பாலையூர், நெய்குப்பை, கீழப்பாலையூர், உத்திரங்குடி, எலையூர், திருக்களம்பூர், செல்லூர், மேல் ஆதிச்சமங்கலம், அர்ப்பார், ஆய்க்குடி, அம்மையப்பன், திருக்கண்ணமங்கை, அகரதிருநல்லூர், காட்டூர், இளவங்கர்குடி, ஆனைவடபாதி, காவனூர், நட்டுவாக்குடி, அத்திசோழமங்கலம், கிருஷ்ணக்கோட்டகம், ஊர்க்குடி, வாழவநல்லூர், புத்தூர், அபிவிருத்தீஸ்வரம், கமுகாகுடி, விஸ்வநாதபுரம், பெருமாள அகரம், நாலில் ஒன்று, மேலதிருமதிக்குண்னம், தியாகராஜபுரம், குளிக்கரை, பெருத்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், மேலராதாநல்லூர், திட்டாணிமுட்டம், விடயபுரம், முசிரியம், திருவிடைவாசல் மற்றும் களத்தூர் கிராமங்கள், கொர்டாச்சேரி (பேரூராட்சி) நீடாமங்கலம் தாலுக்கா (பகுதி) வக்ரநல்லூர், சித்தனங்குடி, வெங்காரம்பேரையூர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, ஓகைபேரையூர், அகரவேளுக்குடி, பழையனுர், கொத்தங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், மஞ்சனவாடி, ஓவர்ச்சேரி, வெற்குடி சாத்தனூர், காக்கையடி, வடபாதிமங்கலம், ஹரிச்சந்திரபுரம், புள்ளமங்கலம், கிளியனூர், பெரியகொத்தூர், மணக்கரை, பாலக்குறிச்சி, சித்திரையூர், சேந்தங்குடி, குலமாணிக்கம், மாவட்டக்குடி, செருவாமணி மற்றும் மாரங்குடி கிராமங்கள்,
கூத்தாநல்லூர் (நகராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,25,356
பெண்
1,27,661
மூன்றாம் பாலினத்தவர்
13
மொத்த வாக்காளர்கள்
2,53,030
சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
2011
மு.கருணாநிதி
திமுக
2006
உ. மதிவாணன்
திமுக
2001
A.அசோகன்
திமுக
1996
A.அசோகன்
திமுக
1991
V.தம்புசாமி
இ.கம்யூ
1989
V.தம்புசாமி
இ.கம்யூ
1984
M.செல்லமுத்து
இ.கம்யூ
1980
M.செல்லமுத்து
இ.கம்யூ
1977
தாழை மு.கருணாநிதி
திமுக
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
U. மதிவாணன்
தி.மு.க
76901
2
A. தங்கமணி
அ.தி.மு.க
49968
3
N. மோகன்குமார்
தே.மு.தி.க
5198
4
A. கணேசன்
பி.ஜே.பி
848
5
A.P. வீரமணி
சுயேச்சை
780
6
R. ராமலிங்கம்
சுயேச்சை
639
7
S. ராஜபாண்டியன்
பி.எஸ்.பி
625
8
K. குமார்
சுயேச்சை
503
135462
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
மு.கருணாநிதி
தி.மு.க
109014
2
M. ராஜேந்திரன்
அ.தி.மு.க
58765
3
P.N. ஸ்ரீராமசந்திரன்
சுயேச்சை
1741
4
R. பிங்கலன்
பா ஜ க
1263
5
S. முத்தரசன்
சுயேச்சை
737
6
R. ரமேஷ்குமார்
ஐஜேகே
357
7
K.R.. ராமசாமி என்ற் டிராபிக் ராமசாமி
சுயேச்சை
351
8
சிவ. இளங்கோ
எம்.எஸ்.கே
281
9
M. தோதைசெல்வம்
சுயேச்சை
255
10
T. ஜெயராமன்
பகுஜன் சமாஜ் கட்சி
189
11
T. அன்பழகன்
சுயேச்சை
111
12
S. அனந்தராஜ்
சுயேச்சை
95
173159
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago