திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. சாத்தனூர் அணையிலிருந்து போளூருக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்படும்.

2. கலசப்பாக்கம் தொகுதியில் படவேடு அருகில் உள்ள செண்பகத் தோப்பு அணை சீரமைக்கப்பட்டுப் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

3. ஜவ்வாதுமலை பழங்குடிமக்கள் நல வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

4. திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

5. திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

6. பெரணமல்லூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

7. பெரணமல்லூரில் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும்.

8. கலசப்பாக்கம் ஒன்றியத்தில் கடலாடி, கீழ்பாலூர், சிங்காரவாடி, மேல்பாலூர், மட்டவெட்டு, கீழ்குப்பம் ஆகிய கிராமங்களில் குடிநீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் சாத்தனூர் கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

9. ஜவ்வாது மலைவாழ் பழங்குடி மக்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

10. திருவண்ணாமலையில் பட்டு, சரிகை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்படும்.

11. நந்தன் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

12. திருவண்ணாமலையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

13. சாத்தனூர் அணை மேம்படுத்தப்பட்டுத் தூர்வாரப்படும்.

14. போக்குவரத்து வசதி மேம்பட திண்டிவனம் - வேட்டவலம் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும்.

15. திருவண்ணாமலையில் உள்ள அரசுப் பொதுமருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு நவீனப்படுத்தப்படும்.

16. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் வசதிகள் செய்து தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

17. திண்டிவனம் - கிருஷ்ணகிரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.

18. திருவண்ணாமலையில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

19. திருவண்ணாமலை – சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

20. கலசப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

21. முந்தைய கழக ஆட்சியில் துவங்கப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தென்பெண்ணையாற்றையும் செய்யாற்றையும் இணைக்கும் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

22. திருவண்ணாமலையில் உள்ள டான்காப் எண்ணெய் தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE