திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிதான் பூந்தமல்லி. இந்த தொகுதியில், பூந்தமல்லி வட்டத்தின் பெரும்பகுதிகள், திருவள்ளூர் வட்டத்தின் ஒரு பகுதி அடங்கியுள்ளன.
பூந்தமல்லி நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகியவை உள்ள பூந்தமல்லி தொகுதியில்தான்,
பிரசித்திப் பெற்ற பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன.
மேலும், பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றம், வெடி குண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் இத்தொகுதியில் இயங்கி வருகின்றன.
தலித், வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் இத்தொகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது.
சென்னையிலிருந்து, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள், பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பூந்தமல்லி பஸ் நிலையப் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும், பூந்தமல்லி அரசு கலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.
மேலும், புதுசத்திரம் பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும், தாமரைப்பாக்கத்தில் கிடப்பில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனை அமைக்கும் பணியை தொடரவேண்டும் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் வரிசை கட்டி நிற்கின்றன.
பூந்தமல்லி தொகுதியில் கடந்த 1977 முதல் 2011 வரை நடந்த 9 தேர்தல்களில், 3 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும், ஒரு முறை தாமாகவும், ஒரு முறை பாமகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் மணிமாறன் 99,097 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதியழகன் 57, 678 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
டி.எ.ஏழுமலை
அதிமுக
2
இ.பரந்தாமன்
திமுக அணி
3
து.கந்தன்
மதிமுக
4
சி.பார்த்தசாரதி
பாமக
5
அ.அமர்நாத்
பாஜக
6
அ.பொன்னரசு
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.
பூந்தமல்லி வட்டம்
கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.
29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
156817
பெண்
158754
மூன்றாம் பாலினித்தவர்
48
மொத்த வாக்காளர்கள்
315619
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
பூந்தமல்லி (தனி), தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1977
டி. இராசரத்தினம்
திமுக
26552
36.49
1980
இராசரத்தினம்
திமுக
38018
48.83
1984
ஜி. அனந்தகிருஷ்ணன்
காங்கிரசு
55129
55.97
1989
டி. ஆர். மாசிலாமணி
திமுக
58640
48.11
1991
டி. சுதர்சனம்
காங்கிரசு
68392
55.5
1996
டி. சுதர்சனம்
தமாகா
75731
53.2
2001
எஸ். சண்முகம்
பாமக
62220
37.51
2006
டி. சுதர்சனம்
காங்கிரசு
98920
---
2011
இரா. மணிமாறன்
அதிமுக
99097
---
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1977
இரா. குலசேகரன்
அதிமுக
21659
29.76
1980
சம்பந்தன்
காந்தி காமராசு தேசிய காங்கிரசு
26930
34.59
1984
டி. இராசரத்தினம்
திமுக
40562
41.18
1989
ஜி. அனந்தகிருஷ்ணன்
காங்கிரசு
29345
24.07
1991
டி. இராசரத்தினம்
திமுக
44240
35.9
1996
பி. கிருஷ்ணமூர்த்தி
காங்கிரசு
25220
17.72
2001
எஸ். செழியன்
திமுக
59904
36.12
2006
ஆர். செங்குட்டுவன்
மதிமுக
83590
2011
காஞ்சி ஜி.வி.மதியழகன்
காங்கிரசு
57678
---
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
சுதர்சனம்.டி
காங்கிரஸ்
98920
2
செங்குட்டுவன்
மதிமுக
83590
3
சந்திரசேகர்.ஜி
தேமுதிக
15711
4
மனோகரன்
பிஜேபி
2062
5
ஜோதிமணி
சுயேச்சை
1432
6
ஜெயகுமார்
பி எஸ் பி
553
7
ராயர்
சுயேச்சை
444
8
வெங்கடேசன்
சுயேச்சை
431
9
சரவணன்
சுயேச்சை
320
10
பார்த்தசாரதி
சுயேச்சை
203
11
வாசுதேவன்
சுயேச்சை
174
12
மாசிலாமணி
சுயேச்சை
151
203991
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
மணிமாறன்
அதிமுக
99097
2
காஞ்சி ஜி.வி.மதியழகன்
காங்கிரஸ்
57678
3
ஜெகன்மூர்த்தி.எம்
பு பா
21118
4
முரளி.கே
சுயேச்சை
2022
5
தேன்மதி
ஐ.ஜே.கே
1616
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago