தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர்பெற்ற பாளையங்கோட்டை தொகுதியில் திருநெல்வேலி தாலுகாவின் ஒரு பகுதியும், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 5 முதல் 39 வது வார்டுகளும் இடம்பெற்றுள்ளன.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
பாளையங்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவ கல்லூரி, நூற்றாண்டு பழமையான கலை அறிவியல் கல்லூரிகள், நூற்றுக்கணக்கான பள்ளிகள் இங்கிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சரக டிஐஜி அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் என்று பல்வேறு முக்கிய அரசுத்துறை அலுவலகங்களும் இத் தொகுதிக்குள் இருக்கின்றன. அண்ணா விளையாட்டரங்கம், திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் என்று இத் தொகுதியை அடையாளப்படுத்தும் அம்சங்கள் ஏராளம் உள்ளன.
இத் தொகுதிக்கு உள்பட்ட மேலப்பாளையம் பகுதியில் 95 சதவிகிதத்துக்குமேல் முஸ்லிம்களே வசிக்கிறார்கள். இதுபோல் பாளையங்கோட்டை நகர்ப்புற பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மேலப்பாளையம் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களும் உள்ளனர். இத் தொகுதியில் ஆசிரியர்கள், பணிகளுக்கு செல்வோர் என்று நடுத்தர வர்க்கத்தினர் அதிமுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். முக்கிய போக்குவரத்து பகுதியான குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நகர்ப்புற பகுதிகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தினம்தினம் அவதியுறுகிறார்கள். வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் வண்டிவண்டியாக பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அரசு சித்த மருத்துவ கல்லூரியும் மருத்துவமனையும் பாழடைந்து கொண்டிருக்கின்றன. உரிய ஆராய்ச்சி பிரிவுகளை தொடங்கவும், விசாலாமான இடத்தில் இக் கல்லூரியை செயல்பட வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. 1977 முதல் 2011 வரை இத் தொகுதியில் நடைபெற்ற 9 சட்டப் பேரவை தேர்தல்களில் 6 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த 2006 மற்றும் 2011 சட்டப் பேரவை தேர்தல்களில் திமுக உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான் வெற்றி பெற்றிருந்தார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,24,695
பெண்
1,28,617
மூன்றாம் பாலினத்தவர்
22
மொத்த வாக்காளர்கள்
2,53,334
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2011
டி. பி. எம். மொகைதீன் கான்
திமுக
2006
டி. பி. எம். மொகைதீன் கான்
திமுக
57.16
2001
டி. பி. எம். மொகைதீன் கான்
திமுக
53.13
1996
முகமது கோதர் மைதீன்
(முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்)
62.98
1991
P.தர்மலிங்கம்
அதிமுக
46.11
1989
S.குருநாதன்
திமுக
34.41
1984
V.S.T.ஷம்சுல் ஆலம்
(முஸ்லீம் லீக்-திமுகவின் சின்னத்தில்)
51.92
1980
V.கருப்பசாமி பாண்டியன்
அதிமுக
57.96
1977
நாஞ்சில்.K.மனோகரன்
அதிமுக
44.1
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
T.P.M. மொய்தீன் கான்
தி.மு.க
85114
2
K.M. நிஜாமுதின்
அ.தி.மு.க
43815
3
K.A.K.K. கலீல் ரகுமான்
தே.மு.தி.க
6342
4
V. முருகன்
எ.ஐ.எப்.பி
5399
5
பேச்சிமுத்து
பாஜக
2839
6
M. எட்வார்டு ராஜ்
பி.எஸ்.பி
2354
7
K. சுபாஷ் சுந்தர்
சுயேச்சை
843
8
K. ஜெபாகுமார்
சுயேச்சை
579
9
P. நரேஷ் அம்பேத்கர்
சுயேச்சை
398
10
D. வேத மாணிக்கம்
சுயேச்சை
364
11
H. நாமசிவாயா சங்கர்
சுயேச்சை
191
12
I. வர்கீஸ் அமுல்ராஜ்
சுயேச்சை
171
13
E. சுடலை மணி
ஆர்.எல்.டி
142
14
A. கண்ணன்
சுயேச்சை
128
15
P. தங்கவேல்
சுயேச்சை
119
16
P. கோமதி நாயகம்
சுயேச்சை
102
148900
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
T.P.M. மொய்தீன் கான்
தி.மு.க
58049
2
V. பழனி
சி.பி.எம்
57444
3
K.S. சாகுல்ஹமீது
சுயேச்சை
7032
4
S. கார்த்திக்நாராயணன்
பி.ஜே.பி
6939
5
A. ஹைதர் அலி
சுயேச்சை
2624
6
S. வேலாயுதம்
சுயேச்சை
1000
7
P. ஸ்டீபன்
பி.எஸ்.பி
983
8
மொகமத்பசுலால்இலக்கி
சுயேச்சை
525
9
A. ஷேக் ஹயாத்
சுயேச்சை
423
10
K. பாலமுருகன்
சுயேச்சை
363
11
S. கஜேந்திரராஜ்
சுயேச்சை
195
12
S. அப்துல்காதர்
சுயேச்சை
193
135770
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago