225 - அம்பாசமுத்திரம்

By செய்திப்பிரிவு

அம்பாசமுத்திரம் தாலுகாவின் ஒரு பகுதியும், அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலசெவல், கோபாலசமுத்திரம், மணிமுத்தாறு பேரூராட்சிகளும், 34 ஊராட்சிகளையும் உள்ளடக்கி பரிந்து விரிந்திருக்கிறது.

தொகுதியின் ஒருபுறம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியும், மறுபுறம் தாமிரபரணி நதி வலம் வருவதாலும் எப்போதும் ரம்யமாக காட்சியளிக்கும் தொகுதி. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கும் இத் தொகுதியில் நெல் சாகுபடி பிரதானம். அம்பை 16 என்ற நெல் ரகத்தையே தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது அம்பாசமுத்திரம். இங்கு நெல் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. பாபநாசம் அணை, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகள் இங்குதான் உள்ளன. குளிர்பிரதேசமான மாஞ்சோலை தேயிலை தோட்டமும் இங்கே அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளதால் புலிகள் காப்பகமும் இங்கிருக்கிறது. பாய்க்கு பிரசித்தி பெற்ற பத்தமடை இங்கிருக்கிறது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

இத் தொகுதியில் இந்துக்கள் அதிகமாக உள்ளனர். தேவர் சமுதாயத்தினர் இத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதுபோல் நாடார் சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்களும் ஓரளவுக்கு கணிசமாக உள்ளனர். இல்லத்து பிள்ளைமார், செட்டியார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், முதலியார் சமுதாயத்தினரும் குறிப்பிடும் அளவுக்கு உள்ளனர். பீடி சுற்றும் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களும் இத் தொகுதியில் கணிசமாக உள்ளனர்.

இத் தொகுதியிலுள்ள காருக்குறிச்சி மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. இத் தொழிலுக்கான மூலப்பொருட்களை எடுப்பதற்கு அதிகாரிகள் காட்டும் கெடுபிடியால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாசன அமைப்புகளை சீரமைக்காதது, வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தாதது, கல்லிடைக்குறிச்சி- அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை திட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம், மணிமுத்தாறு அணை பூங்கா சீரமைப்பு திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது இத் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

1952 முதல் 2011 வரையில் நடைபெற்ற 11 சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தலா 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக வேட்பாளர்கள் தலா 2 முறையும், என்.சி.ஓ., சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர். ஆவுடையப்பனும், 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

அம்பாசமுத்திரம் தாலுகா (பகுதி)

தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், தென் திருப்புவனம், மனப்பாரநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், சாட்டுப்பத்து, அயன் திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், அடையக் கருங்குளம், ஏகாம்பரம், கோடாரங்குளம், வெள்ளங்குளி, வடக்கு காருகுறிச்சி, கூனியூர், புதுக்குடி, தெற்கு வீரவநல்லூர், தெற்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம், அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி வனம், மலையான்குளம், திருவிருத்தான்புள்ளி, பூங்குடையார்குளம், கரிசல்பட்டி, உலகன்குளம், வெங்கட்ரெங்கபுரம் மற்றும் பாபநாசம் (ஆர்.எப்.) கிராமங்கள்.

அம்பாசமுத்திரம் (பேரூராட்சி), விக்கிரமசிங்கபுரம் (பேரூராட்சி), சிவந்திபுரம் (சென்சஸ் டவுன்), கல்லிடைக்குறிச்சி (பேரூராட்சி), வீரவநல்லூர் (பேரூராட்சி), சேரன்மகாதேவி (பேரூராட்சி) பத்தமடை (பேரூராட்சி), மேலச்செவல் (பேரூராட்சி), கோபாலசமுத்திர (பேரூராட்சி) மற்றும் மணிமுத்தாறு (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,14,430

பெண்

1,20,434

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,34,865





தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

இசக்கிசுப்பையா[3]

அதிமுக

2006

R.ஆவுடையப்பன்

திமுக

45.66

2001

M.சக்திவேல் முருகன்

அதிமுக

48.04

1996

R.ஆவுடையப்பன்

திமுக

48.89

1991

R.முருகைய்யா பாண்டியன்

அதிமுக

65.33

1989

K.ரவி அருணன்

இ.தே.கா

34.17

1984

பாலசுப்பிரமணியன்

அதிமுக

54.75

1980

ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம்

மார்க்சிய கம்யூனிசக் கட்சி

47.39

1977

ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம்

மார்க்சிய கம்யூனிசக் கட்சி

35.33

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. ஆவுடையப்பன்

தி.மு.க

49345

2

R. முருகையா பாண்டியன்

அ.தி.மு.க

33614

3

A. நாராயாணன்

ஜே.டி

16370

4

S. பொன்ராஜ்

தே.மு.தி.க

2412

5

M. வெங்கடசலம்

எ.ஐ.எப்.எ

1541

6

S.V.அன்புராஜ் சுப்பிரமணியன்

பி.ஜே.பி

1425

7

E. கணேசன்

பி.எஸ்.பி

959

8

வேல்முருகன்

சுயேச்சை

650

9

R. வைத்திலிங்கம்

சுயேச்சை

580

10

R. ரமேஷ்

சுயேச்சை

386

11

M.V. ரவீந்தரன்

சுயேச்சை

278

12

ராஜாசிங்

சுயேச்சை

215

13

S. மரியச்சிங்கம்

சுயேச்சை

161

14

N. ஆதிமுலம்

சுயேச்சை

123

108059

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

E. சுப்பையா

அ.தி.மு.க

80156

2

R. ஆவுடையப்பன்

தி.மு.க

55547

3

S. நம்பிராஜன்

ஜே.எம்.எம்

2971

4

N. பாலசந்திரன்

பி.ஜே.பி

2688

5

S. சுரேஷ் குமார்

சுயேச்சை

1466

6

R. சார்லஸ் அம்பேத்கர்

சுயேச்சை

753

7

மாரியம்மாள்

பி.எஸ்.பி

497

8

M. குமார்

சுயேச்சை

342

9

அருண்குமார்

சுயேச்சை

330

10

S. சுடரொளி முருகன் யாதவ்

ஐ.ஜே.கே

214

11

S. ஆவுடையப்பன்

சுயேச்சை

156

12

இசக்கிமுத்து

சுயேச்சை

124

13

G. இசக்கி

சுயேச்சை

113

14

C. இசக்கிராஜ்

சுயேச்சை

103

145460

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்