220 - வாசுதேவநல்லூர் (தனி)

By செய்திப்பிரிவு

இத் தொகுதி சிவகிரி தாலுகா, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத் தொகுதி அமைந்துள்ளது. விவசாயமே பிரதான தொழில். கேரள எல்லையையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணை அருவி மற்றும் கோட்டைமலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய எலுமிச்சை சந்தையான புளியங்குடி எலுமிச்சை சந்தை இத் தொகுதியில்தான் இருக்கிறது. தினமும் 100 டன் முதல் 500 டன் வரையில் எலுமிச்சை இச் சந்தையில் தரம் பிரிக்கப்பட்டு கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் பெருமளவுக்கு வசிக்கிறார்கள். இதுபோல் தேவர் சமுதாயத்தினரும், அடுத்து நாடார், யாதவர், செங்குந்த முதலியார் சமுதாயத்தினரும் பரவலாக உள்ளார்கள்.

பிரசித்திபெற்ற புளியங்குடி எலுமிச்சை சந்தைப் பகுதியில் எலுமிச்சையை பதப்படுத்தும் குளிர்பதன கிட்டங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு மற்றும் வசதிகள், வறட்சி காலங்களில் பாதிக்கப்படும் எலுமிச்சை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எலுமிச்சை விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள எல்லையில் சேதமடைந்துள்ள செண்பகவல்லி அணையை சீர்படுத்த வேண்டும். இத் தொகுதியிலுள்ள சிவகிரியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. மேலும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களோ, வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ இல்லை. மேலும் கரும்பு விவசாயிகள் அதிகமுள்ள இத் தொகுதியில் கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளையெல்லாம் கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டும் என்பது இத் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

1967 முதல் 2011 வரையிலான 11 சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா வேட்பாளர்கள் தலா 2 முறையும், மதிமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2006 தேர்தலில் மதிமுக வேட்பாளர் டி. சதன்திருமலைக்குமாரும், 2011-ல் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். துரையப்பாவும் வெற்றி பெற்றிருந்தனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

வாசுதேவநல்லூர்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,09,402

பெண்

1,11,572

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,20,978



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

டாக்டர் எஸ். துரையப்பா

அதிமுக

2006

T.சதன் திருமலை குமார்

மதிமுக

40.27

2001

R.ஈசுவரன்

த.மா.கா

47.05

1996

R.ஈசுவரன்

த.மா.கா

32.5

1991

R.ஈசுவரன்

இ.தே.கா

58.28

1989

R.ஈசுவரன்

இ.தே.கா

32.15

1984

R.ஈசுவரன்

இ.தே.கா

62.34

1980

R.கிருஷ்ணன்

மார்க்சிய கம்யூனிச கட்சி

50.51

1977

R.கிருஷ்ணன்

மார்க்சிய கம்யூனிச கட்சி

33.25

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T. சதன் திருமலைகுமார்

மதிமுக

45790

2

R. கிருஷ்ணன்

சி.பி.ஐ

39031

3

D. ஆனந்தன்

பி.எஸ்.பி

14220

4

S. பிச்சை

தே.மு.தி.க

6390

5

K. பாபு

எ.ஐ.எப்.பி

4332

6

C. செல்வகனி

பாஜக

2579

7

K. சந்திரசேகரன்

சுயேட்சை

1363

113705

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

S.துரையப்பா

அ.தி.மு.க

80633

2

S.கணேசன்

காங்கிரஸ்

52543

3

N. ராஜ்குமார்

பாஜக

2340

4

M. ராமலிங்கம்

சுயேச்சை

2291

5

V. பூசைபாண்டி

சுயேச்சை

1862

6

S. பாண்டி

பி.எஸ்.பி

1130

7

S. பிச்சைகனி

சுயேச்சை

778

8

G. தங்கமலை

சுயேச்சை

449

142026

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்