ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒட்டுமொத்த பகுதியையும் இத் தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 கடலோர மீனவர் கிராமங்களும் இத் தொகுதியில் இருக்கின்றன. இந்த மீனவர்கள் நவீன விசைப்படகுகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் நாட்டுப்படகுகளில் தற்போதுவரை மீன்டிபிடித்து வருகிறார்கள்.
கூடங்குளம் அணுஉலைகள், மகேந்திர கிரியிலுள்ள ஐ.எஸ்.ஆர். திரவ இயக்க உந்தும வளாகம் ஆகியவை இத் தொகுதியின் முக்கிய அடையாளங்கள். மேலும் இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகளவில் காற்றாலைகள் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் உரிய கட்டமைப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படவில்லை என்பதால் கிராமப்புற தொகுதியாகவே நீடிக்கிறது. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இத் தொகுதியில் இருக்கிறது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
நாடார் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இத் தொகுதியிலுள்ள கடலோர கிராமங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களே உள்ளனர். மேலும் உள்பகுதிகளிலும் கணிசமாக அவர்களது எண்ணிக்கை இருக்கிறது. இதனால் இத் தொகுதியில் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி அதிகமுள்ளது.
இத் தொகுதியில் மீனவர்களை அச்சுறுத்தும் கூடங்குளம் அணுமின் நிலையம், தாதுமணல் பிரச்சினை, கடல் அரிப்பு, கடலுக்குள் விசைப்படகு மீனவர்களால் ஏற்படும் தொல்லைகள் என்று பல்வேறு இன்னல்களை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். ராதாபுரம் தொகுதியில் 51 குளங்களுக்கு தண்ணீர் வருவதற்காகவே உயர்த்தி கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை தண்ணீரை இன்றுவரை ராதாபுரம் கால்வாயில் கொண்டுவருவதற்கு அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. காவல்கிணறு சந்திப்பில் தொடங்கப்பட்ட மலர் வணிக வளாகம் முடங்கிப்போயிருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கோரிக்கையாகும். மேலும் காற்றாலை சம்பந்தமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இங்கு அமைத்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
1957 முதல் 2011 வரை நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 2 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை, அதிமுக, தமாகா, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த 2006-ல் இத் தொகுதியில் திமுக வேட்பாளர் எம். அப்பாவு வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ். மைக்கேல்ராயப்பன் வெற்றி பெற்றிருந்தார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ராதாபுரம் தாலுகா
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,18,693
பெண்
1,21,249
மூன்றாம் பாலினத்தவர்
1
மொத்த வாக்காளர்கள்
2,39,943
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2011
மைக்கேல் ராயப்பன்
தேமுதிக
2006
M.அப்பாவு
திமுக
43.36
2001
M.அப்பாவு
சுயேச்சை
45.4
1996
M.அப்பாவு
த.மா.கா
46.6
1991
இரமணி நல்லதம்பி
இ.தே.கா
62.83
1989
இரமணி நல்லதம்பி
இ.தே.கா
32.19
1984
குமரி ஆனந்தன்
கா.கா.கா
53.99
1980
S.முத்து ராமலிங்கம்
கா.கா.கா
53.95
1977
Y.S.M.யூசுஃப்
அதிமுக
38.68
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
M. அப்பாவு
தி.மு.க
49249
2
L. ஞானபுனிதா
அ.தி.மு.க
38552
3
K.P.K. செல்வராஜ்
சுயேச்சை
9017
4
S. சிவானந்தா பெருமாள்
தே.மு.தி.க
6404
5
தமிழிசை
எ.ஐ.எப்.பி
5343
6
A. பார்வதி
சுயேச்சை
1059
7
A. செல்வராஜ்
சுயேச்சை
1051
8
S. தனம்
சுயேச்சை
994
9
P. தங்கசாமி
சுயேச்சை
503
10
T. செல்வராஜ்
சுயேச்சை
318
11
M. செல்வராஜ்
சுயேச்சை
246
12
P. ராஜமாணிக்கம்
அர்.எல்.டி
244
13
S. ராஜாமாணி
எ.பி.எச்.எம்
206
14
P. செல்வராஜ்
சுயேச்சை
167
15
A. செல்வகுமார்
சுயேச்சை
125
16
M. ஆறுமுகம்
சுயேச்சை
106
113584
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. மைக்கேல் ராயப்பன்
தே.மு.தி.க
67072
2
P.வேல்துரை
ஐ.என்.சி
45597
3
N.நல்லகண்ணு
ஜெ.எம்.எம்
6336
4
M. விஜயகுமார்
சுயேச்சை
6154
5
R.சாந்திராகவன்
பி.ஜே.பி
5305
6
ஜேசுபானி வளன்
சுயேச்சை
2716
7
D. இனியன் ஜான்
சுயேச்சை
1020
8
S.கிங்ஸ்லி ஐசக் ஜெபராஜ்
ஐ.ஜே.கே
733
9
ஆல்ட்ரின்
சுயேச்சை
689
10
M. ஆறுமுகம்
சுயேச்சை
610
11
S.டூரக் ராஜ் திலக்
எ.பி.எம்
583
12
R. மரகதவள்ளி
சுயேச்சை
547
13
A. இளஞ்செழியன்
சுயேச்சை
509
14
S. மார்த்தாண்டம்
சுயேச்சை
472
15
G. பாலசுப்பிரமணியன்
சுயேச்சை
351
138694
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago