222 - தென்காசி

By செய்திப்பிரிவு

வீரகேரளம்புதூர் தாலுகா, தென்காசி தாலுகாவின் ஒரு பகுதி, தென்காசி நகராட்சி, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் பேரூராட்சிகள், 15 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

இந்துக்கள், முஸ்லிம்களும் பெருமளவு உள்ளனர். கிறிஸ்தவர்கள் குறைந்த அளவுக்கு உள்ளார்கள். இத் தொகுதியில் பரவலாக தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வாழ்கிறார்கள். விவசாயமே இத் தொகுதி மக்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. குறிப்பாக காய்கறி உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. குற்றாலம் பிரசித்திபெற்ற சுற்றுலாதலமாக இருப்பதால் இப்பகுதியில் சுற்றுலாவை அடிப்படையாக கொண்ட தொழிலும் நடைபெறுகிறது.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இத் தொகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான உருப்படியான திட்டங்கள் பல ஆண்டுகளாகவே செயல்படுத்தப்படவில்லை. ஆண்டுதோறும் சீசன் காலத்தில் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள்கூட செய்துதரப்படவில்லை. குற்றாலத்தில் இயற்கையை காவுவாங்கும் வகையில் பல கட்டுமானங்கள் உருவாகிவருகின்றன. இத் தொகுதியில் தென்னை விவசாயத்தை அழிக்கும் வகையில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுவது வேகமாக நடைபெற்று வருகிறது. இது விவசாயிகளுக்கு கவலையை அளித்திருக்கிறது. இத் தொகுதியில் வேளாண் உற்பத்தி பொருட்களை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும் வேளாண் உற்பத்தி பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளும் குறைவு.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ், திமுக, அதிமுக தலா 2 முறையும், தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் கருப்பசாமிபாண்டியனும், 2011-ல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சரத்குமாரும் வெற்றி பெற்றிருந்தனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

வீரகேரளம்புதூர் தாலுகா

தென்காசி தாலுகா (பகுதி)

குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,30,113

பெண்

1,33,242

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,63,357



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

சரத்குமார்

திமுக

-

2006

V.கருப்பசாமி பாண்டியன்

திமுக

49.98

2001

K.அண்ணாமலை

அதிமுக

51.41

1996

K.ரவி அருணன்

த.மா.கா

52.82

1991

S.பீட்டர் அல்போன்ஸ்

இ.தே.கா

62.1

1989

S.பீட்டர் அல்போன்ஸ்

இ.தே.கா

36.29

1984

T.R.வெங்கடரமணன்

இ.தே.கா

60.45

1980

A.K.சட்டநாத கரையாளர்

அதிமுக

49.88

1977

S.முத்துசாமி கரையாளர்

இ.தே.கா

41.36

1971

சம்சுதீன் என்ற கதிரவன்

தி.மு.க

1967

ஏ சி பிள்ளை

இ.தே.கா

1962

ஏ ஆர் சுபையாமுதலியார்

இ.தே.கா

1957

A.K.சட்டநாத கரையாளர்

சுயேச்சை

1952

சுப்பிரமணியம்பிள்ளை

இ.தே.கா

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V.கருப்புசாமி பாண்டியன்

தி.மு.க

69755

2

உதயசூரியன்

மதிமுக

51097

3

K. ரவி அருணன்

பாஜக

5190

4

S. காமராஜ்

தே.மு.தி.க

5081

5

S. சந்திரன்

பி.எஸ்.பி

2607

6

N. மாரியப்பன்

சுயேச்சை

2095

7

A. முத்துராஜா

எ.ஐ.எப்.பி

1645

8

K. பாலசுப்பிரமணியன்

சுயேச்சை

1166

9

S.S. தங்கப்பன்

சுயேச்சை

423

10

R. ரவிச்சந்திரன்

அர்.எல்.டி

315

11

P. ஆறுமுகசாமி

சுயேச்சை

196

139570

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R.சரத்குமார்

அ.தி.மு.க

92253

2

Y.கருப்புசாமி

தி.மு.க

69286

3

S.V. அன்புராஜ்

பாஜக

2698

4

S. அறுமுகம்

எ.பி.எச்.எம்

1507

5

D. மாரியப்பன்

சுயேச்சை

1140

6

M. வேதாள ஐயங்கன்

சுயேச்சை

1080

7

S. பரமசிவன்

சுயேச்சை

954

8

V. கண்ணன்

பி.எஸ்.பி

501

9

G. ராமநாதன்

சுயேச்சை

491

169910

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்