தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூர் மாநகராட்சியின் 52 வார்டுகள், வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூர் ஒன்றியத்தின் ஒரு பகுதியான புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய 9 ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகப் பாரம்பரிய சின்னமான சோழர் கால பெரிய கோயில், நாயக்கர் மற்றும் மராட்டியர் கால அரண்மனை, உலகப் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், அருங்காட்சியகம், இந்திய விமானப்படைத் தளம், மொழிக்கென முதலில் உருவான தமிழ்ப் பல்ககலைக்கழகம், தமிழகத்தின் மூன்றாவது பழமையான தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பழமையான ராசா மிராசுதார் அரசுப் பொது மருத்துவமனை, "ஐஐசிபிடி" எனப்படும் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகம், குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரி, சரபோஜி அரசு ஆண்கள் கல்லூரி, அரசினர் ஐடிஐ, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தனியாரின் சாஸ்த்ரா, பெரியார் மணியம்மை, பிரிஸ்ட் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பன்னாட்டுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளைக் கொண்டுள்ளது.
தமிழ்ப் பல்கலை. அருகில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியரகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை சாலை கீழ வஸ்தாசாவடி ரயில்வே மேம்பாலும், நாகை சாலை மாரியம்மன்கோயில் ரயில்வே மேம்பாலம், சுற்றுச் சாலையின் 2-ம் கட்டப் பணிகள், வெண்ணாற்றுப் பாலம் ஆகியன புதிய வரவுகள். தஞ்சை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர் - சென்னை இடையே முன்பு ஓடி, பின்னர் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். தஞ்சை - திருச்சி இரண்டாவது ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாற்று வழி காண வேண்டும். வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண வேண்டும். அடிக்கடி தீப்பற்றி எரியும் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி திறந்தவெளி குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வேண்டும். மேரீஸ் கார்னர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பன தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.
கள்ளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், நாயக்கர், மராத்தியர், சௌராஸ்டிரா, யாதவர், பிராமணர், நாடார், வெள்ளாளர், அகமுடையார், தலித் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எம். ரெங்கசாமி
அதிமுக
2
அஞ்சுகம் பூபதி
திமுக
3
வி. ஜெயபிரகாஷ்
தேமுதிக
4
கோ. குஞ்சிதபாதம்
பாமக
5
எம்.எஸ். ராமலிங்கம்
பாஜக
6
ஏ. நல்லதுரை
நாம் தமிழர்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,29,913
பெண்
1,38,102
மூன்றாம் பாலினத்தவர்
18
மொத்த வாக்காளர்கள்
2,68,033
கடந்த 1952 முதல் 2011 வரை ( 1984 இடைத் தேர்தல்) நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 8 முறை திமுக, 5 முறை காங்கிரஸ், 2 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுகவின் சி.நா.மீ. உபயதுல்லாவும், 2011 தேர்தலில் அதிமுகவின் எம். ரெங்கசாமியும் வெற்றிபெற்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
தஞ்சாவூர் (மாநகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
1952
M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1957
A. Y. S. பரிசுத்தநாடார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1962
மு. கருணாநிதி
திராவிட முன்னேற்றக் கழகம்
1967
A. Y. S. பரிசுத்தநாடார்
இந்திய தேசிய காங்கிரஸ்
1971
S.நடராஜன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1977
S.நடராஜன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1980
S.நடராஜன்
திராவிட முன்னேற்றக் கழகம்
1984
துரைகிருஷ்ணமூர்த்தி
இந்திய தேசிய காங்கிரஸ்
1989
எஸ். என். எம். உபயத்துல்லா
திராவிட முன்னேற்றக் கழகம்
1991
எஸ்.டி.சோமசுந்தரம்
அ.தி.மு.க
1996
எஸ். என். எம். உபயத்துல்லா
திராவிட முன்னேற்றக் கழகம்
2001
எஸ். என். எம். உபயத்துல்லா
திராவிட முன்னேற்றக் கழகம்
2006
எஸ். என். எம். உபயத்துல்லா
திராவிட முன்னேற்றக் கழகம்
2011
M.ரெங்கசாமி
அ.தி.மு.க
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S.N.M. உபாயதுல்லா
தி.மு.க
61658
2
M. ரங்கசாமி
அ.தி.மு.க
50412
3
P. சிவனேசன்
தே.மு.தி.க
7484
4
M.S. ராமலிங்கம்
பி.ஜே.பி
2057
5
A. நாகேந்திரன்
சுயேச்சை
756
6
M. பழனிசாமி
எஸ்.பி
367
7
K. கனகராஜா
சுயேச்சை
304
123038
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
M. ரங்கசாமி
அ.தி.மு.க
75415
2
S.N.M. உபாயதுல்லா
தி.மு.க
68086
3
M.S. ராமலிங்கம்
பி.ஜே.பி
1901
4
P. ராயார் விக்டர் ஆரோக்கியராஜ்
ஐ.ஜே.கே
1505
5
K. முத்துகுமாரன்
சுயேச்சை
712
6
V. சூசை அருள்
எல்.சி.ஒ.பி
553
7
P. திருநாவுக்கரசர்
பி.எஸ்.பி
436
8
K. பாலு
சுயேச்சை
273
9
G. இளவரசன்
சுயேச்சை
249
149130
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago