175 - ஒரத்தநாடு

By செய்திப்பிரிவு

ஒரத்தநாடு ஒன்றியத்தின் 58 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 19 ஊராட்சிகள், தஞ்சாவூர் ஒன்றியத்தின் 19 ஊராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தின் கல்விராயன்விடுதி ஊராட்சி மற்றும் ஒரத்தநாடு போரூராட்சியை உள்ளடக்கிய தொகுதி.

ஒரத்தநாடு தொகுதியில் ஏற்கனவே இருந்த நீடாமங்கலம் ஒன்றியம், தொகுதி சீரமைப்பில் மன்னார்குடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரத்தநாட்டில் புதைச் சாக்கடை திட்டம், கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, ஐடிஐ போன்றவை புதிய வரவுகள்.

கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், தலித், அகமுடையார், முத்தரையர், செட்டியார் சமூகத்தினர் பரவலாகவும் உள்ளனர்.

முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதி. நெல், கரும்பு, தென்னை, பயறு வகைகள் முக்கிய விளை பொருட்கள்.

தோங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். கல்லணைக் கால்வாயில் ரூ.200 கோடியில் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், குருங்குளம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கழிவுகளைக் கொண்டு இணை மின் நிலையம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருவோணத்தை மையமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மக்கள், விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்.

கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலிலும், கடைசியாக நடைபெற்ற 2011 தேர்தலிலும் அதிமுகவின் ஆர். வைத்திலிங்கம் (அமைச்சர்) தொடர்ந்து இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர். வைத்திலிங்கம்

அதிமுக

2

எம். ராமச்சந்திரன்

திமுக

3

பா. ராமநாதன்

தேமுதிக

4

மா. சரவண ஐயப்பன்

பாமக

5

தி. கேசவன்

பாஜக

6

மு. கந்தசாமி

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.

தஞ்சாவூர் வட்டம் (பகுதி)

விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள்.

ஒரத்தநாடு வட்டம் (பகுதி)

கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் (சடையார்கோயில்), மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம் (பணையக்கோட்டை), நெய்வாசல் தெற்கு (எஸ்) (அரசப்பட்டு), நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழ உளூர், உளூர் மேற்கு, காட்டுக்குறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால்,பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடு கீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடு மேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கிழக்கு, கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு, தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு,ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிக்காடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழபுரம்,வடக்குக்கோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை, கோவிலூர், புதூர், பாளம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு,அருமுளை, திருமங்கலக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோட்டை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோட்டை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரைக்கோட்டை, தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், சில்லத்தூர், புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார் குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரியமூர்த்திபுரம் (அக்கரைவட்டம்), தெற்குக்கோட்டை, சோழகன்குடிக்காடு, வேதநாயகிபுரம், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர் பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடையக்கொல்லை, கீழமங்கலம்,யோகநாயகிபுரம், உஞ்சியவிடுதி மற்றும் பணிகொண்டான்விடுதி கிராமங்கள்,

ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி)

ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)

கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள் (இவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள ரீதியாகவும் மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகின்றன.)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்

ஆண்

1,10,507

பெண்

1,14,397

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,24,904



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

1971

எல். கணேசன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

டி. எம். தைலப்பன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1980

தா. வீராசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

1984

தா. வீராசாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

எல். கணேசன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

அழகு. திருநாவுக்கரசு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

பி. இராஜமாணிக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2011

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. வைத்திலிங்கம்

அ.தி.மு.க

61595

2

P. ராஜ்மாணிக்கம்

தி.மு.க

57752

3

R. ராமேஷ்

தே.மு.தி.க

7558

4

T. மகேந்திரன்

பி.ஜே.பி

1733

128638

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. வைத்திலிங்கம்

அ.தி.மு.க

91724

2

T. மகேஷ் கிருஷ்ணசாமி

தி.மு.க

59080

3

A. ஆரோக்கியசாமி

ஐ.ஜே.கே

1843

4

P. முருகையன்

சுயேச்சை

1612

5

A. ஜெயபால்

பி.எஸ்.பி

1542

6

A. கர்ணன்

பி.ஜே.பி

1532

7

G. பரமேஸ்வரி

சுயேச்சை

1348

158681

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்