ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் ஒன்று பரமக்குடி (தனி) தொகுதி. மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதி.
இத்தொகுதியில் பரமக்குடி நகராட்சி, அபிராமம் பேரூராட்சி மற்றும் பரமக்குடி வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள், கமுதி வட்டத்தில் ஒரு பகுதியான த.புனவாசல், வங்காருபுரம், பெரியாணைகுளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, நத்தம், மரக்குளம், மண்டலமாணிக்கம் ஆகிய கிராமங்கள் இடம் பெற்றுள்ளன
இத்தொகுதியில் முதலிடத்தில் விவசாயிகளும், அடுத்தபடியாக நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். தொகுதியில் ஆதிதிராவிடர், முக்குலத்தோர், யாதவர், சவுராஸ்டிரா, செட்டியார் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாக்குகளே வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவைகளாக தொடர்ந்து உள்ளன.
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் அதிகளவில் நெசவாளர்கள் வசிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், காட்டன் புடடைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. பெரிய தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில்கள் தொகுதியில் இல்லை. கமுதக்குடியில் மத்திய அரசின் ஸ்பின்னிங் மில் ஒன்றும், அச்சங்குளத்தில் கூட்டுறவு நூற்பாலை ஒன்றும் உள்ளது. இதில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதனால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பருத்தி, மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுவதால் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் மில், மிளகாயை அரைத்து பவுடர் தயாரிப்பது உள்ளிட்ட தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்ளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை வசிக்கும் பகுதியாக பரமக்குடி நகராட்சி இருந்தும் இங்கு இதுவரை பாதாளச்சாக்கடை திட்டப்பணி அமைக்கப்படவில்லை. வைகையாற்றின் தென்கரையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டதால் பரமக்குடியின் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. வைகையாற்றின் குறுக்கே பார்த்திபனூர் மதகு அணை அமைந்துள்ளது.
பரமக்குடியில் இரண்டு அரசு கலைக்கல்லூரிகள், ஒரு அரசு ஐடிஐ, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, 2 தனியார் கல்வியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன.
1952 முதல் 2011 வரை 14 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை ஒரு முறை, திமுக 3 முறை, அதிமுக 6, தமாகா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2006 தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராம்பிரபுவும், கடைசியாக 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் எஸ்.சுந்தரராஜூம் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
டாக்டர் சி.முத்தையா
அதிமுக
2
உ.திசைவீரன்
திமுக
3
ம.இருளன்
விசிக
4
ரா.தங்கராஜ்
பாமக
5
பி.பாலகணபதி
பாஜக
6
வ.ஹேமலதா
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பரமக்குடி தாலுகா
கமுதி தாலுகா (பகுதி)
த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்களம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள்.
அபிராமம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,22,050
பெண்
1,23,429
மூன்றாம் பாலினத்தவர்
19
மொத்த வாக்காளர்கள்
2,45,498
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு
2006
R.இராம் பிரபு
இ.தே.கா
45.36
2001
R.இராம் பிரபு
த.மா.கா
49.58
1996
U.திசை வீரன்
திமுக
43.18
1991
S.சுந்தர ராஜ்
அதிமுக
66.72
1989
S.சுந்தர ராஜ்
அதிமுக
36.53
1984
K.பாலுச்சாமி
அதிமுக
58.19
1980
R.தவசி
அதிமுக
54.22
1977
K.உக்கிர பாண்டியன்
அதிமுக
36.31
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R. ராம் பிரபு
காங்கிரஸ்
51075
2
S. சுந்தர ராஜ்
அ.தி.மு.க
50021
3
A. திருமாமலை ராஜா
தே.மு.தி.க
4554
4
K. உக்ரபாண்டியன்
பி.ஜே.பி
2090
5
A. காளிதாஸ்
பி.எஸ்.பி
1654
6
R. பாண்டியன்
சுயேச்சை
1307
7
U. காமராசன்
சுயேச்சை
614
8
L. செல்வம்
சுயேச்சை
405
9
C. கருப்பையா
சுயேச்சை
354
10
N. பொன்வேந்தச் சோழன்
ஜே.டி
275
11
M. அழகு
சுயேச்சை
251
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
J.S. சுந்தர்ராஜ்
அ.தி.மு.க
86150
2
R. ராம்பிரபு
காங்கிரஸ்
51544
3
நாகராஜன் சுப
பாஜக
4787
4
R. காந்தி
பகுஜன் சமாஜ் கட்சி
1538
5
V. வேலூ
சுயேச்சை
1522
6
M. சரவணகுமார்
டி.டி.எம்.கே
1444
7
M. ராசமுர்த்தி
சுயேச்சை
552
8
V. முருகானந்தம்
சுயேச்சை
388
9
G. வடிவேலு
சுயேச்சை
358
10
G. கணேசன்
சுயேச்சை
290
11
K. குமரேசன்
சுயேச்சை
282
148855
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago