புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த குளத்தூர் (தனி) தொகுதி மறு சீரமைக்கப்பட்டு கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை பகுதியில் முந்திரி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதால் இப்பகுதி முந்திரிக்கு புகழ்பெற்று விளங்குகிறது. முந்திரி உடைத்து பருப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை கொண்ட கந்தர்வகோட்டை( தனி) தொகுதி 2-வது முறையாகத் தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த தொகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்து முக்குலத்தோர், முத்தரையர், உடையார் மற்றும் பிற இன மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த தொகுதியில் கந்தர்வகோட்டை தாலுகாவில் 36 ஊராட்சிகள், கறம்பக்குடி தாலுகாவில் 16 ஊராட்சிகள், 1 பேரூராட்சி, குளத்தூர் தாலுகாவில் 41 ஊராட்சிகள், புதுக்கோட்டை தாலுகாவில் 2 ஊராட்சிகள் ஆகியவை இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
கந்தர்வகோட்டை பகுதி முற்றிலும் விவசாயிகள் நிறைந்த பகுதி. எனவே விவசாயிகளுக்கு தேவையான நீர்நிலைகள் அனைத்தும் பாதுகாத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த பகுதியில் அதிக அளவில் முந்திரி உற்பத்தி உள்ளது. எனவே இங்கு அரசு முந்திரி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். கடைவீதியிலேயே பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும்.
தொகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக, தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். தொகுதி முழுக்க மின்சார தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை போக்கி தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம் மிகுந்த இப்பகுதியில், விவசாயத்திற்கு 24 மணி நேரமும், மும்முனை மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
கறம்பக்குடி பகுதியானது தொடர்ந்து பின்தங்கிய பகுதியாகவே இருப்பதால் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்பகுதிகளுக்கு கறம்பக்குடியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.
கந்தர்வக்கோட்டை தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலிலேயே போட்டியிட்டவர்களில் அதிமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் 67,128 வாக்குகளும், திமுக வேட்பாளர் எஸ். கவிதைப்பித்தன் 47,429 வாக்குகளும் பெற்றனர். இதில், 19,699 வாக்குகள் வித்தியாசத்தில் என். சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். மேலும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரானார்.
வாக்காளர்கள்
இத்தொகுதியில் 94,053 ஆண் வாக்காளர்களும், 90,516 பெண் வாக்காளர்கள் , இதரர் 7 பேர் என மொத்தம் 1,84,576 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
பா. ஆறுமுகம்
அதிமுக
2
டாக்டர் கே. அன்பரசன்
திமுக
3
எம். சின்னத்துரை
மார்க்சிஸ்ட்
4
எம். பழனிமாணிக்கம்
பாமக
5
மு. பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன்
பாஜக
6
சி. மோகன்ராஜ்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கந்தர்வகோட்டை தாலுகா
குளத்தூர் தாலுகா (பகுதி)
செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.
கீரனூர் (பேரூராட்சி),
ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
94,795
பெண்
92,018
மூன்றாம் பாலினத்தவர்
7
மொத்த வாக்காளர்கள்
1,86,820
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
சுப்பிரமணியன்.N
அதிமுக
67128
2
கவிதைப்பித்தன்.S
திமுக
47429
3
செல்வராணி.R
ஐஜேகே
2974
4
ரெத்தினம்.V
சுயேச்சை
1357
5
முருகேசன்.M
பகுஜன் சமாஜ் கட்சி
1073
6
பாரதி.K
சுயேச்சை
842
7
ஆசைதம்பி.P
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
824
8
சித்ரா.R
சுயேச்சை
754
122381
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago