182 - ஆலங்குடி

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகமும் விளையும் பகுதியாகவும், எப்போதும் செழிப்பாகவே காணப்படக்கூடியது ஆலங்குடி.

இத்தொகுதிக்குட்பட்ட தமிழகத்தில் அதிக உயரத்தில் அதாவது 33 அடியில் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் குதிரை சிலையும், கீரமங்கலத்தில் சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரருக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடியானது மாநிலத்தில் கடலை சந்தைக்கு சிறப்பு பெற்றுள்ளது. வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் பகுதியில் விளையும் பலாபழம் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மலர்களும் அதிகளவில் விளைகிறது.

இத்தொகுதியில் கடந்த 1962-க்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 5 முறையும், திமுக 4, காங்கிரஸ், சுயேட்சை, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் 57,250 வாக்குகளும், பாமக வேட்பாளர் சுப. அருள்மணி 52,123 வாக்குகளும் பெற்றனர். இதில், கு.ப. கிருஷ்ணன் 5,127 வாக்குகள் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும், இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

இத்தொகுதியில் அதிகமாக ஆழ்துளை கிணறுகள் இருப்பதன் மூலம் மின்தேவையும் அதிகரித்திருப்பதால் ஆலங்குடியில் கோட்டப்பொறியாளர் அலுவலகம், மின்மாற்றி பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருவதால் கடலில் கலக்கும் மழைநீரை இப்பகுதிக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கையும் நிறைவேறவில்லை.

கல்வி விழிப்புணர்வு உள்ள ஆலங்குடி தொகுதியில் அரசு கல்லூரிகள் கிடையாது. எவ்வித தொழில்சாலையும் இல்லாததால் வேலை வாய்ப்பு உறுதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

வாக்காளர்கள்:

இத்தொகுதியில் 98,130 ஆண் வாக்காளர்களும், 98,369 பெண் வாக்காளர்கள், இதர் 3 பேர் என மொத்தம் 1,96,502 வாக்காளர்கள் உள்ளனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஞான. கலைச்செல்வன்

அதிமுக

2

வீ. மெய்யநாதன்

திமுக

3

க. சந்திரசேகரன்

மதிமுக

4

சுப. அருள்மணி

பாமக

5

அ. சரவணன்

ஐஜேகே

6

து. கலா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆலங்குடி தாலுகா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, ,கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட் பனைகுளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், மாங்காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

99,054

பெண்

99,882

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

1,98,937

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

1957

சின்னையா மற்றும் அருணாசலதேவர்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

பி.முருகையன்

திமுக

1967

கே.வி.சுப்பையா

திமுக

1971

கே.வி.சுப்பையா

திமுக

1977

த.புஷ்பராஜு

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

பி.திருமாறன்

அதிமுக

1984

அ.வெங்கடாசலம்

அதிமுக

1989

K.சந்திரசேகரன்,B.v.sc.,

திமுக

1991

S.சண்முகநாதன்

அதிமுக

1996

அ.வெங்கடாசலம்

சுயேச்சை

2001

அ.வெங்கடாசலம்

அதிமுக

2006

S.ராசசேகரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2011

கு.ப.கிருஷ்ணன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜசேகரன்.S

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

60122

2

வெங்கடாசலம்.A

அதிமுக

50971

3

செல்வின்ராஜ்.K

தேமுதிக

16739

4

ராஜபரமசிவம்

சுயேச்சை

14939

5

ஜீவானந்தம்.R

பாஜக

7634

6

கருப்பையா.K

பகுஜன் சமாஜ் கட்சி

1400

7

சிவகுமார் துரை

சுயேச்சை

1181

152986

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கிருஷ்ணன்.கு.ப

அதிமுக

57250

2

அருள்மணி.S

பாமக

52123

3

ராஜபாண்டியன்.A.V

சுயேச்சை

21717

4

சரவணன்.A

இந்திய ஜனநாயக கட்சி

3666

5

ஜெகநாதன்

பாஜக

2033

6

நாகாமூர்த்தி

சுயேச்சை

1414

138203

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்