புதுக்கோட்டையானது தமிழகத்தில் வேறெங்கும் இல்லாதவகையில் தனி சமஸ்தானமாக விளங்கியது. இந்தப் பகுதி மன்னர்களாட்சியின்கீழ் இருந்ததால் அப்போது விளங்கிய அரண்மனையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. நேர் கொண்ட வீதிகளைக் கொண்டுள்ளது. முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த ஊர் புதுக்கோட்டை. பிரகதாம்பாள் கோயில், புவனேஷ்வரி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலங்களாகும். மாநிலத்தில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி, புதுக்கோட்டை ஒன்றியம், கறம்பக்குடி ஒன்றியத்தில் பல்லவராயன்பத்தை, இலைகடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, குரும்பிவயல், கருக்காகுறிச்சி, முள்ளங்குறிச்சி, கணக்கன்காடு, மழையூர், தெற்குக்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னன்விடுதி, மாங்கோட்டை உள்ளிட்ட கிராமங்களும் புதுக்கோட்டை தொகுதியில் உள்ளன.
இத்தொகுதியில் முத்தரையர், கள்ளர், ஆதிதிராவிடர், முஸ்லிம், உடையார் உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். கடந்த 1962 முதல் நடைபெற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், திமுக, அதிமுக தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும் வென்றுள்ளது.
இதில், 2012 ஏப்.1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எஸ்.பி. முத்துக்குமரன் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் என். ஜாகிர்உசேனைவிட 71,468 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக் கொண்டைமான் வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் அதிமுக 1,01,998 வாக்களும், தேமுதிக 30,500 வாக்குகளும் பெற்றன. இந்த இடைத்தேர்தலில் தேமுதிக டெபாசிட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் புதிய தொழில்சாலைகள் ஏதும் அமையாததால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. மன்னர் அரசு கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கறம்பக்குடியில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விபத்துகளும் ஏற்பட்ட பிறகும்கூட அங்கு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
இத்தொகுதியில் 1,11, 636 ஆண் வாக்காளர்களும், 1,14,386 பெண் வாக்காளர்கள், இதர் 7 என மொத்தம் 2,26,029 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
வி. ஆர். கார்த்திக் தொண்டைமான்
அதிமுக
2
பெரியண்ணன் அரசு
திமுக
3
என். ஜாகிர் உசேன்
தேமுதிக
4
சி. வெள்ளைச்சாமி
பாமக
5
ஜி.குமார்
ஐஜேகே
6
எம். அருண்மொழிசோழன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
புதுக்கோட்டை வட்டம்
ஆலங்குடி வட்டம் (பகுதி)
பல்லவராயன்பாதை, இலைக்காடிவிடுதி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, குரும்பிவயல், கீழத்திரு, தெற்கு தெரு, வடதெரு, வாணக்கன்காடு, முள்ளங்குறிச்சி தெற்கு, முள்ளங்குறிச்சி வடக்கு, கணக்கன்காடு, கருப்பட்டிப்பட்டி, ஆயிப்பட்டி, வலங்கொண்டான்விடுதி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, மலையூர், தெற்குத்தெரு, தீத்தானிப்பட்டி, பொன்னம்விடுதி, மாங்கோட்டை மற்றும் களபம் கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,12,030
பெண்
1,15,696
மூன்றாம் பாலினத்தவர்
7
மொத்த வாக்காளர்கள்
2,27,733
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2012 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1951
பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
22954
1962
எ. தியாகராசன்
திமுக
37563
1967
ஆர். வி. தொண்டைமான்
காங்கிரஸ்
45342
1971
எம். சத்தியமூர்த்தி
நிறுவன காங்கிரஸ்
34680
1977
ராஜ்குமார் விஜயரகுநாத தொண்டைமான்
காங்கிரஸ்
36406
1980
ராசுகுமார் விஜயரகுநாத தொண்டைமான்
காங்கிரஸ்
47660
1984
ஜெ. முகமது கானி
காங்கிரஸ்
63877
1989
எ. பெரியண்ணன்
திமுக
45534
1991
சி. சுவாமிநாதன்
காங்கிரஸ்
82205
1996
எ. பெரியண்ணன்
திமுக
79205
2001
சி. விஜயபாஸ்கர்
அதிமுக
77627
2006
நெடுஞ்செழியன்
அதிமுக
64319
2011
எஸ். பி. முத்துக்குமரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
65466
2012இடைத்தேர்தல்*
வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்
அ.தி.மு.க.
101998
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1951
நடேசன் அம்பலக்காரர்
காங்கிரஸ்
12756
1962
அருணாச்சல தேவர்
காங்கிரஸ்
20252
1967
தியாகராசன்
திமுக
25255
1971
கேஆர். சுப்பையா
இந்திய பொதுவுடமைக் கட்சி
33393
1977
சி. அன்பரசன்
அதிமுக
19352
1980
கேஆர். சுப்பையா
இந்திய பொதுவுடமைக் கட்சி
46387
1984
கேஆர். சுப்பையா
இந்திய பொதுவுடமைக் கட்சி
26214
1989
இராம வீரப்பன்
அதிமுக (ஜா)
26254
1991
வி. என். மணி
திமுக
38806
1996
சி. சுவாமிநாதன்
காங்கிரஸ்
36422
2001
அரசு பெரியண்ணன்
திமுக
49444
2006
எம். ஜாபர் அலி
திமுக
62369
2011
பெரியண்ணன் அரசு
திமுக
62365
2012இடைத்தேர்தல்*
ஜாகீர் உசேன்
தேமுதிக
30500
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
நெடுஞ்செழியன்.R
அதிமுக
64319
2
ஜாபர்அலி.M
திமுக
62369
3
துரைதிவ்யநாதன்
பாமக
13559
4
ஜவாஹிர்.S
தேமுதிக
6880
5
ஆறுமுகம்.M
டிஎன்ஜேசி
837
6
விஜயகுமார்.P
சுயேச்சை
811
7
வெற்றிசெல்வம்.A
சுயேச்சை
770
8
காசி விடுதலைகுமரன்
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) விடுதலை
714
9
லியோ ரமேஷ்
சுயேச்சை
634
10
ரஜினிகாந்த்.M
சுயேச்சை
327
11
ஸ்ரீனிவாசன்.G
புதிய நீதி கட்சி
319
12
சரவணன்.M
சுயேச்சை
293
13
சுகுமார்.P
சுயேச்சை
196
14
மாரிமுத்து.T
சுயேச்சை
180
15
பாண்டியன்.A
சுயேச்சை
147
16
பரமசிவம்.M
சுயேச்சை
147
152502
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
முத்துகுமரன்.P
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
65466
2
பெரியண்ணன்அரசு
திமுக
62365
3
ஸ்ரீனிவாசன்.N
இந்திய ஜனநாயக கட்சி
4098
4
பரதன்.V
சுயேச்சை
3901
5
செல்வம்.பால
பாஜக
1748
6
ரவி.C
சுயேச்சை
832
7
செவேந்திலிங்கம்.T
சுயேச்சை
750
8
ஜவாஹிர்.S
சுயேச்சை
417
9
கருணாநிதி.C
சுயேச்சை
380
139957
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago