நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. இத்தொகுதி மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளில் இத்தொகுதியும் ஒன்று. சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பேரூராட்சி, சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய இரு வட்டாட்சியர் அலுவலங்களும் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்க நகை ஆபரண கூடங்களில் சேகரமாகும் மண்களை விலை கொடுத்து வாங்கி வந்து, அதில் உள்ள தங்கத்துகள் பிரித்தெடுத்தல், செங்கல் தயாரிப்பு போன்றவையும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. சேந்தமங்கலம் தொகுதியின் அடையாளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மூலிகைக்கு பெயர்போன மலை என்பதுடன், சிறந்த சுற்றுலாத்தளமாகவும் விளங்கி வருகிறது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் சிறந்தவராக பண்டைய கால பாடல்களில் குறிப்பிடப்படும் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்து மதத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அதே வேளையில் முஸ்லீம், கிறிஸ்துவ மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
தொகுதியின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த கொல்லிமலையை தனி வட்ட கோரிக்கை சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், கொல்லிமலையில் மூலிகைப் பண்ணை, சித்த மருத்துவக் கல்லூரி போன்றவை மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பாகும். கடந்த 1957ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1962, 1971, 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.
அதுபோல் கடந்த 1977 முதல் 1991 வரை என, தொடர்ந்து 5 முறை மற்றும் 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என, மொத்தம் 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சாந்தி ராஜமாணிக்கம் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
சி. சந்திரசேகரன்
அதிமுக
2
கே. பொன்னுசாமி
திமுக
3
மு. சத்தியா
தேமுதிக
4
கே. சுசீலா
பாமக
5
பி. மணிகண்டன்
ஐஜேகே
6
ரா. அன்புத்தம்பி
நாம் தமிழர்
7
மு. சின்னுசாமி
கொமதேக
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ராசிபுரம் தாலுகா
பச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.
சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)
நாமக்கல் தாலுகா (பகுதி)
கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.
காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,13,081
பெண்
1,16,746
மூன்றாம் பாலினத்தவர்
8
மொத்த வாக்காளர்கள்
2,29,835
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1957
டி. சிவஞானம் பிள்ளை
காங்கிரஸ்
23749
1962
வி. ஆர். பெரியண்ணன்
திமுக
27728
1967
எ. எஸ். கவுண்டர்
காங்கிரஸ்
31308
1971
சின்ன வெள்ளைய கவுண்டர்
திமுக
34507
1977
வி. சின்னசாமி
அதிமுக
28731
1980
எஸ். சிவப்பிரகாசம்
அதிமுக
37577
1984
எஸ். சிவப்பிரகாசம்
அதிமுக
54129
1989 *
கே. சின்னசாமி
அதிமுக (ஜெயலலிதா)
36489
1991
கே. சின்னசாமி
அதிமுக
72877
1996
சி. சந்திரசேகரன்
திமுக
58673
2001
கே. கலாவதி
அதிமுக
61312
2006 **
கே. பொன்னுசாமி
திமுக
64506
2011
சாந்தி ராஜமாணிக்கம்
தேமுதிக
76637
ஆண்டு
2 ஆம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1957
சோமசுந்தர கவுண்டர்
சுயேச்சை
16959
1962
பி. பி. கே. தியாகராஜரெட்டியார்
காங்கிரஸ்
24205
1967
எஸ். டி. துரைசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
30537
1971
வெள்ளைய கவுண்டர்
காங்கிரஸ் (ஸ்தாபன)
21452
1977
வடம கவுண்டர்
காங்கிரஸ்
13881
1980
வடம கவுண்டர்
காங்கிரஸ்
30543
1984
எஸ். கலாவதி
திமுக
26277
1989 *
சி. அழகப்பன்
திமுக
31452
1991
எஸ். சிவப்பிரகாசம்
திமுக
17316
1996
கே. கலாவதி
அதிமுக
38748
2001
சின்னுமதி சந்திரசேகரன்
திமுக
43497
2006 **
பி. சந்திரன்
அதிமுக
47972
2011
கே.பொன்னுசாமி
திமுக
68132
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. பொன்னுசாமி
தி.மு.க
64506
2
P. சந்திரன்
அ.தி.மு.க
47972
3
R. சாந்தி
தே.மு.தி.க
11747
4
K. குப்புசாமி
பி.ஜே.பி
1913
5
C. சந்திரசேகரன்
சுயேச்சை
1612
6
C. சந்திரசேகரன்
சுயேச்சை
1490
129240
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
R. சாந்தி
தே.மு.தி.க
76637
2
K. பொன்னுசாமி
தி.மு.க
68132
3
T. சாந்தி
சுயேச்சை
5208
4
அம்பல பொன்னுசாமி
சுயேச்சை
3745
5
V. பழனிச்சாமி
ஐ.ஜே.கே
3392
6
C. ரமேஷ்
பி.ஜே.பி
2966
7
K. சண்முகம்
சுயேச்சை
1215
161295
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago