189 - மதுரை (கிழக்கு)

By செய்திப்பிரிவு

மதுரை- கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யாவை தேர்ந்தெடுத்த தொகுதி இது. உயர் நீதிமன்றம், யானைமலை, நரசிங்கம் பெருமாள் கோயில், திருமோகூர் பெருமாள் கோயில், பாண்டிகோயில், இடையபட்டியில் அமைந்துள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாம், இலந்தைகுளம் ஐ.டி.பார்க், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. மதுரை கிழக்கு தொகுதி மதுரை மாநகராட்சி எல்லையில் அமைந்திருந்தாலும் நகரின் விரிவாக்க பகுதிகள், கிராமங்களும் இத்தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

சமயநல்லூர் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு அதன் பல பகுதிகள் கிழக்கு தொகுதியில் சேர்க்கப்பட்டன. மதுரை நாராயணபுரம், அய்யர்பங்களா, ஆனையூர், திருப்பாலை, ஆத்திக்குளம், உத்தங்குடி, வண்டியூர், மதுரை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களின் சில பகுதிகள் இந்த தொகுதியில் உள்ளன. கூலி தொழிலாளர்கள், நெசவாளர்கள் இத்தொகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர்.

ஒத்தக்கடை சில்வர் பட்டறை தொழில், வண்டியூர் நெசவாளர் பிரச்சனை, தறி மின் பற்றாக்குறை, விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை, சாலை வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள், உத்தங்குடி-சமயநல்லூர் இணைப்புச்சாலை உள்ளிட்டவை நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளன.

1957-ம் ஆண்டு முதல் 13 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும். திமுக 2 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2006-ம் ஆண்டு தேர்தலில் என்.நன்மாறன்(மா.கம்யூ) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் கே.தமிழரசன்(அதிமுக) வெற்றி பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மதுரை வடக்கு தாலுகா (பகுதி)

கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளாந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பந்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம்பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூளப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலுப்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர், பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி, நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம், காளிகாப்பான், பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை. களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர் மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள்.

ஆணையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (சென்சஸ் டவுன்), நாகனாகுளம் (சென்சஸ் டவுன்), ஒத்தக்கடை (சென்சஸ் டவுன்) மற்றும் வண்டியூர் (சென்சஸ் டவுன்).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,41,429

பெண்

1,44,922

மூன்றாம் பாலினத்தவர்

31

மொத்த வாக்காளர்கள்

2,86,382

சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

K.தமிழரசன்

அதிமுக

55.29

2006

N.நன்மாறன்

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி

38.2

2001

N.நன்மாறன்

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி

43.29

1996

V.வேலுசாமி

திமுக

46.24

1991

O.S.அமர்நாத்

அதிமுக

64

1989

S.R.இராதா

அதிமுக

48.88

1984

கா.காளிமுத்து

அதிமுக

51.08

1980

N.சங்கரய்யா

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி

49.35

1977

N.சங்கரய்யா

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி

33.45

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

நன்மாறன்.N

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

36383

2

பூமிநாதன்.M

மதிமுக

36332

3

தாமோதரன்.A

தேமுதிக

18632

4

பிரபாகரன்.A.P

பாஜக

1553

5

சுப்பையா.N

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்

655

6

தங்கவேல்.L

சுயேச்சை

654

7

ரதினவேல்சாமி.R

சுயேச்சை

436

8

எட்வர்ட்.P.S.P

ஐக்கிய ஜனதா தளம்

319

9

ராஜகோபால்.R

சுயேச்சை

280

95244

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தமிழரசன்.K

அதிமுக

99447

2

மூர்த்தி.P

திமுக

70692

3

ஸ்ரீனிவாசன்.K

பாஜக

2677

4

கோவிந்தராஜ்.V

சுயேச்சை

2287

5

ஞானசேகரன்.K.G

இந்திய ஜனநாயக கட்சி

1008

6

தவமணி.A

பகுஜன் சமாஜ் கட்சி

929

7

ராஜ்குமார்.P

சுயேச்சை

826

8

தமிழ்செல்வி.K

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

697

9

ராமர்.V.P

சுயேச்சை

472

10

மகாலிங்கம்.S

சுயேச்சை

350

11

பிரகாசம்.R

சுயேச்சை

291

12

திருப்பதி.V

சுயேச்சை

193

179869


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்