137 - குளித்தலை

By செய்திப்பிரிவு

1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியின் முதல் எம்எல்ஏ முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்பது இத்தொகுதியின் சிறப்பு. குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சிகள், குளித்தலை, தோகைமலை ஊராட்சி ஒன்றியங்கள், கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களின் சில பகுதிகள் அடங்கியது. கடம்பர்கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில், கடந்த 2007ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி சட்டமன்ற பொன்விழாவையொட்டி அய்யர்மலையில் தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரி. இத்தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். வாழை, நெல், கரும்பு, கோரை சாகுபடி செய்யப்படுகிறது.

சோழிய வெள்ளாளர், முத்தரையர், ஊராளி கவுண்டர்கள், ரெட்டியார்கள், நாயக்கர்கள் நிறைந்த பகுதி.

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் ரோப் கார் திட்டம், தீயணைப்பு நிலையம், புதிய பேருந்து நிலையம், மணப்பாறை சாலை ரயில்வே மேம்பாலம் ஆகியவை நீண்ட கால கோரிக்கையாகும்.

விவசாயத்தை தவிர வேறு வேலை வாய்ப்புகள் இல்லாததால் கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். காவிரியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு. மணல் லாரிகளால் குளித்தலை புறவழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை தடுக்கும் வகையில் மருதூர், வதியம் சாலை சந்திப்பில் மேம்பாலங்கள் அமைக்கவேண்டும்.

கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்துப்பட்டுவிட்டதால் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்த்தவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திமுக, அதிமுக தலா 5 முறைகள், காங்கிரஸ் 2 முறை, கம்யூனிஸ்ட் 1 முறை வெற்றிப்பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பாப்பாசுந்தரம் வெற்றிப்பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

என்.ஆர்.சந்திரசேகரன்

அதிமுக

2

இ.ராமர்

திமுக

3

த.ஜமுனா

தேமுதிக

4

எஸ்.பாலசுப்பிரமணி

பாமக

5

என்.கே.என்.சதக்கத்துல்லா

இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்

6

சீனி. பிரகாஷ்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

கிரிஷ்ணராயபுரம் தாலுகா (பகுதி)

சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள்,

குளித்தலை தாலுகா (பகுதி)

கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள்

குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,02,914

பெண்

1,05,915

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,08,831

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1957

மு. கருணாநிதி

திராவிட முன்னேற்றக் கழகம்

1962

V.இராமநாதன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

M.கந்தசாமி

திராவிட முன்னேற்றக் கழகம்

1971

M.கந்தசாமி

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

P.E.சீனிவாசரெட்டியார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1980

R.கருப்பையா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1984

முசிரிபுத்தன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

A.பாப்பாசுந்தரம்

அதிமுக ஜெ

1991

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

R.செல்வம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

R.மாணிக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2011

A.பாப்பாசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. மாணிக்கம்

தி.மு.க

69615

2

A. பாப்பாசுந்தரம்

அ.தி.மு.க

55626

3

M.விஸ்வநாதன்

தே.மு.தி.க

4790

4

N.C. ராஜு

பி.ஜே.பி

2010

5

P. மகேந்திரன்

சுயேச்சை

1338

6

N. நாகராஜன்

சுயேச்சை

1026

7

K. கதிர்வேலு

பி.எஸ்.பி

1006

8

R. பூபதி

சுயேச்சை

900

9

M. முனுசாமி

எஸ்.பி

700

10

V. சின்னசாமி

சுயேச்சை

357

11

R. கோதை

சுயேச்சை

355

12

P. இறச்சி

சுயேச்சை

194

13

S. கந்தசாமி

சுயேச்சை

153

138070

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. பாப்பாசுந்தரம்

அ.தி.மு.க

87459

2

R. மணிக்கம்

தி.மு.க

64986

3

A. தனசேகரன்

பி.ஜே.பி

2200

4

K.V. சின்னசாமி

சுயேச்சை

1670

5

R. பிரகாஷ்கண்ணா

ஐ.ஜே.கே

1344

6

M. செல்வம்

பிபிஐஎஸ்

1164

7

S. கந்தசாமி

சுயேச்சை

839

159662

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்