கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் ஒன்று கிள்ளியூர். குளப்புரம், மெதுகும்மல், கொல்லங்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம்,, பாலூர், மிடாலம், புதுக்கடை, பாலப்பள்ளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் இத்தொகுதிக்குள் வருகின்றது. கிள்ளியூர் தொகுதிக்குள் கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் சமூக வாக்குகள் அதிக அளவில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மீனவர் சமூக வாக்குகள் உள்ளது. தேங்காய்பட்டிணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்லாமியர்கள் வாக்கும் கணிசமாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
60,000க்கும் அதிகமாக மீனவர் வாக்குகள் தொகுதிக்குள் இருந்தாலும் மீனவர்களுக்கு தொகுதிக்குள் ஏராளமான பிரச்னைகள் உள்ளது. அதில் முதன்மையானது இனயம் பகுதியில் அமைய உள்ள வர்த்தக துறைமுகம். துவக்கத்தில் குளச்சல் பகுதியில் தான் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட இத்துறைமுகப் பணிகள், இனயம் பகுதிக்குள் மேற்கொள்ள வாழ்வாதாரப் பிரச்னையாக இவ்விசயத்தை கையில் எடுத்து போராட்ட களத்திற்கு வந்துள்ளனர் மீனவர்கள். இதே போல் கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மாயமாகுவதும் இங்கு வாடிக்கை. அவர்களை மீட்கவும், தேடுதல் பணியில் ஈடுபடவும் ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது.
கடற்கரை கிராமங்களில் தொற்று நோயை போல அதிவேகமாக பரவி தாக்கி வரும் புற்றுநோயை கட்டுப்படுத்தவோ, விழிப்புணர்வு மேற்கொள்ளவோ வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கின்றது. மந்த கதியில் நடைபெற்று வரும் தேங்காய்பட்டிணம் மீன்பிடித் துறைமுகப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மீனவர்களின் கோரிக்கைகள் கிடப்பில் கிடக்கின்றது. கருங்கல் முதல் கொல்லங்கோடு வரையிலான சாலைகள் மிகவும் சிதலமடைந்து கிடக்கின்றது. நீர் மேலாண்மை குழறுபடிகளால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க கோரிய கோரிக்கையும் கிடப்பில் கிடக்கின்றது.
கடந்த 9 சட்டசபை தேர்தல்களில் ஜனதா கட்சி மூன்று முறையும், சுயேட்சை ஒரு முறை, ஜனதா தளம் ஒரு முறையும், தா.மா.கா, காங்கிரஸ் கட்சிகள் தலா இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரு சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான் ஜேக்கப் தான் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அவர் த.மா.கவில் உள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
விளவன்கோடு தாலுகா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,25,491
பெண்
1,25,153
மூன்றாம் பாலினத்தவர்
18
மொத்த வாக்காளர்கள்
2,50,662
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2011
S. ஜான் ஜேகப்
இ.தே.கா
2006
S. ஜான் ஜேகப்
இ.தே.கா
55.18
2001
குமாரதாஸ்
த.மா.கா
49.16
1996
குமாரதாஸ்
த.மா.கா
41.24
1991
குமாரதாஸ்
ஜனதா தளம்
34.25
1989
பொன். விஜயராகவன்
சுயேட்சை
39.53
1984
குமாரதாஸ்
ஜனதா கட்சி
58.24
1980
பொன். விஜயராகவன்
ஜனதா கட்சி (ஜே.பி)
54.28
1977
பொன். விஜயராகவன்
ஜனதா கட்சி
79.2
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. ஜான் ஜகோப்
காங்கிரஸ்
51016
2
T.சந்தரகுமார்
பாஜக
24411
3
D. குமாரதாஸ்
அ.தி.மு.க
14056
4
A. ரிச் மோகன்ராஜ்
தே.மு.தி.க
1743
5
T. ஸ்டான்லி கிபிராஜ்
சுயேச்சை
492
6
A. ரேஹு ஆனந்தராஜ்
சுயேச்சை
316
7
A. ஜ்ஸ்டின் ஃபெலிக்ஸ்
சுயேச்சை
236
8
C. சுரேஷ்
சுயேச்சை
185
92455
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S.ஜான் ஜகோப்
காங்கிரஸ்
56932
2
T.சந்தரகுமார்
பாஜக
32446
3
R. ஜார்ஜூ
அ.தி.மு.க
29920
4
D.குமாரதாஸ்
சுயேச்சை
10238
5
J. ஜோஸ் பில்பின்
சுயேச்சை
3457
6
M. சூசை மரியான்
சுயேச்சை
1123
7
C. தங்கமணி
சுயேச்சை
569
8
P.பாபு
எல்.எஸ்.பி
533
9
M. பவுல்ராஜ்
சுயேச்சை
476
10
G.S. தயாளன்
பி.எஸ்.பி
468
11
C. சதீஷ்
சுயேச்சை
382
136544
வாக்காளர்கள் :
தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுகளில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 2563551 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களுள் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,27,757
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,31,409
திருநங்கைகள் 31 பேர் உள்ளன
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago