காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்பூங்காவை (சிப்காட்) உள்ளடக்கியது. இத்தொகுதியில், மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், சோமங்கலம், எருமையூர், நடுவீரப்பட்டு, எடையார்பாக்கம் செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், இருங்காட்டுகோட்டை ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது.
ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்லூரி மற்றும் ஏராளமான கலைஅறிவியல் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளன. தனியார் பள்ளிகளும் அதிகம் உள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பூங்கா அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியுள்ளது.
மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். மேலும் வெளிநாட்டவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை.
சென்னை-பெங்களூர் செல்லும் சாலையில் காலையும், மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் அரைகுறையாக இருக்கும் பாதாளச் சாக்கடை திட்டம், முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில், சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைப்பது மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இராமனுஜர் கோயிலுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைப்பது என, பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 5 முறை தேசிய காங்கிரசும் 3 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. அதிமுக கட்சி இரண்டுமுறை (1991) வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்உறுப்பினர் டி.யசோதாதவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் பெருமாள் வெற்றிபெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
கு.பழனி
அதிமுக
2
கு.செல்வபெருந்தகை
காங்
3
வீரக்குமார்
(விசிகே
4
செ.முத்துராமன்
பாமக
5
மு.மனோகரன்
பாஜக
6
பா.சிவரஞ்சனி
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், கோட்டுர், எலிமியான் கோட்டூர், கிளாய், ஆயக்கொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், காட்ரம்பாக்கம், தாராவூர், சிறுகளத்தூர், காவனூர், கொள்ளச்சேரி, நந்தம்பாக்கம், புதுப்பேர், நல்லூர், அமரம்பேடு, பொன்னலூர், சிறுகிளாய், பாடிச்சேரி, எட்டிகுத்திமேடு, குணரம்பாக்கம், எடையார்பக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம், கண்ணன்தாங்கல், வடமங்கலம், பிள்ளையார்பாக்கம், வெங்காடு, இரும்பேடு, சோமங்கலம், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, புதுச்சேரி, சேத்துப்பட்டு, கருணாகரச்சேரி, கொளத்தூர், நாவலூர், ஒட்டன்கரணை, கடுவஞ்சேரி, போந்தூர், இருங்குளம், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, கொடமநல்லூர், மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சந்தவேலூர், சிறுமங்காடு, ஆரனேரி, வடகால், சிறுகளத்தூர், வளத்தான்சேரி, குண்டுபெரும்பேடு, நல்லாம்பெரும்பேடு, அழகூர், மாகாண்யம், வெள்ளாரை, மலைப்பட்டு, மாகாண்யம் (ஆர்.எப்), மணிமங்கலம், வரதராஜபுரம், கரசங்கால், துண்டல்பழனி, படப்பை, சிறுமாத்தூர், சாலமங்கலம், நரியம்பாக்கம், கூளங்கசேரி, பேரிச்சம்பாக்கம், வைப்பூர், வல்லம், மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், வீட்டவீடாகை, ஜம்போடை, செல்வழிமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, காரணைதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளாரைதாங்கல், ஆரம்பாக்கம், ஆதனஞ்சேரி, கொருக்கன்தாங்கல், ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், ஒரத்தூர், நாவலூர், வட்டம்பாக்கம், ஓரகடம், சென்னகுப்பம், பனையூர், எழிச்சூர், பூண்டி, வடக்குப்பட்டு, பாதர்வாடி, வளையங்கரணை, உமையாள்பரனன்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, சிறுவாஞ்சூர், வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், கீழ்கழனி, குத்தனூர், காவனூர் மற்றும் கட்டுப்பாக்கம் கிராமங்கள்.
மாங்காடு (பேரூராட்சி), சிக்கராயபுரம் (செசன்ஸ் டவுன்), குன்றத்தூர் (பேரூராட்சி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,49,526
பெண்
1,56,687
மூன்றாம் பாலினத்தவர்
26
மொத்த வாக்காளர்கள்
3,06,239
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2006 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
டி. சண்முகம்
சுயேச்சை
14244
41.67
1957
எம். பக்தவச்சலம்
காங்கிரஸ்
21784
53.05
1962
எம். பக்தவச்சலம்
காங்கிரஸ்
33825
49.64
1967
டி. இராசரத்தினம்
திமுக
41655
54.13
1971
டி. இராசரத்தினம்
திமுக
46617
59.15
1977
என். கிருசுணன்
அதிமுக
29038
43
1980
டி. யசோதா
காங்கிரஸ்
37370
52.97
1984
டி. யசோதா
காங்கிரஸ்
46421
53.94
1989
இ. கோதண்டம்
திமுக
38496
42.21
1991
போளூர் வரதன்
காங்கிரஸ்
63656
60.95
1996
இ. கோதண்டம்
திமுக
71575
58.72
2001
டி. யசோதா
காங்கிரஸ்
70663
49.93
2006
டி. யசோதா
காங்கிரஸ்
70066
---
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
சேசாச்சரி
காங்கிரஸ்
11761
34.41
1957
சி.வி. எம். அண்ணாமலை
சுயேச்சை
17050
41.52
1962
அண்ணாமலை
திமுக
32588
47.82
1967
எம். பக்தவச்சலம்
காங்கிரஸ்
32729
42.53
1971
மணலி ராமகிருசுண முதலியார்
நிறுவன காங்கிரஸ்
32201
40.85
1977
டி. எசு. லட்சுமணன்
திமுக
20901
30.95
1980
எசு. செகநாதன்
அதிமுக
31341
44.42
1984
கே. எம். பஞ்சாச்சரம்
திமுக
34601
40.21
1989
அருள் புகழேந்தி
அதிமுக (ஜெ)
32106
35.2
1991
இ. கோதண்டம்
திமுக
31220
29.89
1996
கே. என். சின்னாண்டி
காங்கிரஸ்
35139
28.83
2001
எம். இராகவன்
திமுக
53470
37.78
2006
கே. பாலகிருசுணன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
52272
---
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
பதிவான வாக்குகள்
1
D.யசோதா
காங்கிரஸ்
70066
2
பாலகிருஷ்ணன்
வி சி கே
52272
3
பழனி
தேமுதிக
30096
4
சிவகுமார்
பிஜேபி
2866
5
ரங்கநாதன்
சுயேச்சை
1803
6
அன்பழகன்
சுயேச்சை
1350
7
கதிர்வேலு
சுயேச்சை
911
8
சண்முகம்
சுயேச்சை
678
160042
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
பெருமாள்
அதிமுக
101751
2
யசோதா
காங்கிரஸ்
60819
3
தனசேகரன்
பு பா
2968
4
ஹரிகிருஷ்ணன்
பிஜேபி
2072
5
ரமேஷ்
சுயேச்சை
960
6
குமரேசன்
பிபிஐஎஸ்
950
7
காந்தி
சுயேச்சை
760
8
செந்திவேல்
பி எஸ் பி
664
9
சுரேஷ்
ஐ ஜே கே
501
10
சந்தோசம்
சுயேச்சை
413
11
சாக்ரடீஸ்
சி பி ஐ ( எல்)
405
172263
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago