காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று மதுராந்தகம் தொகுதி. மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியை உள்ளடக்கியது. இத்தொகுதியில், மதுராந்தகம் நகராட்சி, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளடக்கியுள்ளது.
படாளம், ஜானகிபுரம், தொழுப்பேடு, எல்.எண்டத்தூர், சித்தாமூர், கத்திரிச்சேரி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. பாண்டிச்சேரியிலிருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைவதற்கான வாயிலாக திகழ்கிறது.
தனியார் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளை அதிகளவில் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகளும் அதிகம் உள்ளது. புகழ்பெற்ற மாநிலத்தின் பெரிய ஏரியாக கருதப்படும் மதுராந்தகம் ஏரி அமைந்துள்ளது. மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் தலித் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் எனபல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள்.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்கு குறைவில்லை.
மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளேதே, தொகுதியின் முதன்மையான பிரச்னையாக கருதப்படுகிறது. மேலும், சென்னை பெங்களூர் செல்லும் சாலையில் காலையும், மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகரித்து வரும் விபத்துகள் மற்றொரு முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோயிலுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
செ.கு.தமிழரசன்
இகுக
2
சு.புகழேந்தி
திமுக
3
மா.தென்னரசு
தேமுதிக
4
எ.ஆதிகேசவன்
பாமக
5
மா.வினாயகமூர்த்தி
ஐஜேகே
6
பா.வெற்றிச்செல்வம்
நாம் தமிழர்
கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 5 முறை தேசிய திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒருமுறை (2006) வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்உறுப்பினர் டி.யசோதாதவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் கணிதா வெற்றிபெற்றனர்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,07,113
பெண்
1,11,656
மூன்றாம் பாலினத்தவர்
23
மொத்த வாக்காளர்கள்
2,18,792
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
1952
பி. பரமேஸ்வரன் மற்றும் வெங்கடசுப்பா ரெட்டி
காங்கிரஸ்
1957
வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் எல்லப்பன்
இந்திய தேசிய காங்கிரசு மற்றும் கட்சி சாராதவர்
1962
பி. பரமேஸ்வரன்
காங்கிரஸ்
1967
கோதண்டம்
திமுக
ஆண்டு
வெற்றிபெற்றவர்
கட்சி
1971
மதுராந்தகம் சி.ஆறுமுகம்
திமுக
1977
மதுராந்தகம் சி.ஆறுமுகம்
திமுக
1980
உக்கம்சந்த்
அதிமுக
1984
மதுராந்தகம் சி.ஆறுமுகம்
திமுக
1989
உக்கம்சந்த்
அதிமுக
1991
சொக்கலிங்கம்
அதிமுக
1996
வெங்கடேசன்
திமுக
2001
வாசுதேவன்
அதிமுக
2006
டாக்டர் காயத்ரி தேவி
காங்கிரஸ்
2006 சட்டமன்ற தேர்தல்
35. மதுராந்தகம்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. காயத்ரி தேவி
ஐ.என்.சி
51106
2
K. அப்பாதுரை
அ.தி.மு.க
47415
3
D. கஜேந்திரன்
தே.மு.தி.க
9885
4
M. சுந்தரமூர்த்தி
பி.ஜே.பி
2282
5
S. மேனகா
சுயேட்சை
1840
6
C. நடராஜன்
சுயேட்சை
1256
7
M. தேவராஜ்
சுயேட்சை
1178
8
P. ராஜேந்திரபாபு
பி.எஸ்.பி
989
9
M. சண்முகம்
எஸ்.பி
416
10
K. அக்பர்
டி.என்.ஜே.சி
321
11
K.G. சம்பாத்
சுயேட்சை
307
12
A.L. சுல்தான்மொஹிதின்
சுயேட்சை
165
13
S.P. ராமசந்திரன்
சுயேட்சை
142
14
R. லக்ஷ்மிபதி
வி.எ.கே
116
117418
2011 சட்டமன்ற தேர்தல்
35. மதுராந்தகம்
வரிசை
எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S. கணிதா
அ.தி.மு.க
79256
2
K. ஜெயகுமார்
ஐ.என்.சி
60762
3
C. ஜெய்சங்கர்
சுயேட்சை
1885
4
R. வரதன்
பி.ஜே.பி
1630
5
V.R. பரமசிவம்
சுயேட்சை
1223
6
S. தனசேகரன்
எல்.எஸ்.பி
886
7
S. விநாயகம்
பி.எஸ்.பி
784
8
M.K. ரகுராமன்
சுயேட்சை
508
9
M.K. ரவி
சுயேட்சை
478
10
M. மணி
சுயேட்சை
332
147744
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago