காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று தாம்பரம் தொகுதி. கடந்த 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக இருந்து வந்த தாம்பரம் தொகுதி கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டு சிறிய தொகுதியாக சுருங்கிவிட்டது. இத்தொகுதியில், தாம்பரம் நகராட்சி, சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சிகள், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், முடிச்சூர், அகரம்தென், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், மதுரப்பாக்கம், திருவஞ்சேரி ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. தாம்பரம், சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது.
மிகவும் பழமைவாய்ந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உள்பட ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகளையும், ஏராளமான தனியார் பொறியியல் கல்லூரிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் பஞ்சமில்லை. புகழ்பெற்ற இந்திய விமானப்படை தளமும் இங்குள்ளது. தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். மேலும், பாதுகாப்பு படையினரும், முன்னாள் பாதுகாப்பு படையினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் தினமும் காலையும் மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. தாம்பரம் நகராட்சியில் அரைகுறையாக இருக்கும் பாதாளச் சாக்கடை திட்டம், முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலையில் ஏற்படும் போக்குவாத்து நெரிசல், சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைப்பது, வேளச்சேரி சாலையில் கேம்ப்ரோடு சந்திப்பு, ராஜகீழ்பாக்கம் சந்திப்பு இடங்களில் மேம்பாலம், முக்கிய சாலைகளில் இருந்து உள்புற இடங்களுக்குச் செல்ல மினி பஸ் சேவை என பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில், 5 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஒரேயொரு முறை (1991) வென்றது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் டிகேஎம் சின்னையாவும் வெற்றிபெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
சிட்லபாக்கம் சி.ராஜேந்திரன்
அதிமுக
2
எஸ்.ஆர்.ராஜா
திமுக
3
எம்.செழியன்
தேமுதிக
4
ஆர்.சுரேஷ்
பாமக
5
ஏ.வேதசுப்ரமணியம்
பாஜக
6
பி.நாகநாதன்
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தாம்பரம் வட்டம்
கடப்பேரி, திருவஞ்சேரி, முடிச்சூர், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம் மற்றும் மூலச்சேரி கிராமங்கள்.
தாம்பரம் (நகராட்சி), சிட்லப்பாக்கம் (பேரூராட்சி), செம்பாக்கம் (பேரூராட்சி), மாடம்பாக்கம் (பேரூராட்சி), பெருங்களத்தூர் (பேரூராட்சி) மற்றும் பீர்க்கன்கரணை (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,90,879
பெண்
1,90,310
மூன்றாம் பாலினத்தவர்
30
மொத்த வாக்காளர்கள்
3,81,219
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 – 2011 )
ஆண்டு
வேட்பாளர்
கட்சி
1977
முனுஆதி
அதிமுக
1980
பம்மல் நல்லதம்பி
திமுக
1984
ராஜ மாணிக்கம்
அதிமுக
1989
வைத்தியலிங்கம்
திமுக
1991
கிருஷ்ணன்
காங்கிரஸ்
1996
வைத்தியலிங்கம்
திமுக
2001
வைத்தியலிங்கம்
திமுக
2006
எஸ்.ஆர். ராஜா
திமுக
2011
டி. கே. எம். சின்னையா
அதிமுக
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
பதிவான வாக்குகள்
1
S.R.ராஜா
திமுக
269717
2
சோமு
மதிமுக
220965
3
தர்மா
தேமுதிக
48522
4
சிவராமன்
பிஜேபி
13598
5
வெங்கடேசன்
சுயேச்சை
2249
6
அக்பர்
டி என் ஜே சி
1403
7
சேகர்
எஸ் பி
1179
8
மோகன்
சுயேச்சை
729
9
சலீம்
சுயேச்சை
682
10
எலிசபெத் ராணி
சுயேச்சை
581
11
ராஜேஷ்
சுயேச்சை
555
12
மணிகண்டன்
சுயேச்சை
427
13
பக்கிரி
சுயேச்சை
392
14
பால்ராஜ்
சுயேச்சை
372
15
நந்தகுமார்
சுயேச்சை
275
16
கிருஷ்ணன்
சுயேச்சை
242
561888
2011தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
பதிவான வாக்குகள்
1
T. K. M. சின்னையா
அதிமுக
91702
2
S.R.ராஜா
திமுக
77718
3
வேத சுப்பிரமணியம்
பிஜேபி
3061
4
ஜார்ஜ்
MGRTK
1449
5
ராஜு
ஐஜேகே
955
6
மின்னல் ஸ்ரீநிவாசன்
சுயேச்சை
602
7
காலனி சுந்தர்
சுயேச்சை
566
8
கிருஷ்ண பாபு
எல் எஸ் பி
565
9
மாரிமுத்து
பி எஸ் பி
408
10
நந்தகுமார்
சுயேச்சை
293
11
ரவிச்சந்திரன்
எஸ்எச்எஸ்
237
12
பாலகிருஷ்ணன்
எம்எம்கேஏ
160
13
ஞானசேகர்
சுயேச்சை
159
14
சத்யநாராயணன்
சுயேச்சை
137
15
காமராஜ்
சுயேச்சை
128
16
சூரியநாராயணன்
சுயேச்சை
90
178230
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago