சிப்காட் தொழிற்பேட்டை, சாலைப்போக்குவரத்துக்கழக மருத்துவ கல்லூரி, சானிட்டோரியம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட பெருந்துறை தொகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டு தொழில்களையும் சார்ந்த வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி, குன்னத்தூர் போன்ற பேரூராட்சிகளுடன், ஈரோடு மாவட்டத்தின் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொகுதியில் அடங்கியுள்ளன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்துள்ளதால், வெளிமாவட்ட, வெளி மாநில மாணவர்களும் வந்து கல்வி பயிலும் இடமாக பெருந்துறை மாறியுள்ளது. கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், முதலியார், வேட்டுவக்கவுண்டர், ஆதிதிராவிடர் போன்ற பிற சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் பெருந்துறையும் ஒன்று.
பெருந்துறை தொகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயம், தொழில்துறைக்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் கிராமப்பகுதிகளில் துவங்கப்பட்டுள்ள சாய தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசு காரணமாக, தொகுதியின் பல இடங்களில் குடிநீர் மாசடைந்துள்ளது. பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோகோ கோலா தொழிற்சாலையை பெருந்துறை சிப்காட்டில் துவங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் பெருந்துறை தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. 1984, 1989, 1991 தேர்தல்களில் அதிமுகவும், 1996ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது. அதன் பின், 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக திமுக ஆதரவுடன் போட்டியிட்ட கே.கே.சி.பாலுவை தோற்கடித்து வெற்றி பெற்ற தோப்பு என்.டி.வெங்கடசாலம் தமிழக அமைச்சரவையில் வருவாய், சுற்றுசூழல்துறை அமைச்சராக அலங்கரித்தார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
தோப்பு என்.டி.வெங்கடாசலம்
அதிமுக
2
கே.பி.சாமி என்கிற பி. மோகனசுந்தரம்
திமுக
3
வி.பி. சண்முகம்
தமாகா
4
பி.குமரேசன்
பாமக
5
ஏ.சந்திரசேகரன்
பாஜக
6.
சி.லோகநாதன்
நாம் தமிழர்
7
கே.கே.சி.பாலு
கொமதேக
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பெருந்துறை வட்டம் (பகுதி)
புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி, நெட்டிச்சிபாளையம், செட்டிகுட்டை, வளைய்பாளையம், கணபதி பாளையம், தோரணளவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களுர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி, கந்தகம்பாளையம், பெரியவினாமலை, சின்ன வினாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளளயம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி,கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப் பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுப்புதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம்,துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹாரகத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.
பெத்தாம்பாளையம் (பேரூராட்சி), பல்லபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி),நல்லம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி(பேரூராட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை, இந்நாள்வரை தேர்வு செய்யாத, தமிழகத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று. தி.மு.க.வை தேர்ந்தெடுக்காத தொகுதிகள்:
1951ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தொகுதிகளில் , தி.மு.க. வை ஒரு முறைகூட தேர்ந்தெடுக்காத ,தமிழகத்தின் ஒரே தொகுதி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,04,401
பெண்
1,08,456
மூன்றாம் பாலினத்தவர்
-
மொத்த வாக்காளர்கள்
2,12,857
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1957
என். கே. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
24205
1962
என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்
காங்கிரஸ்
36225
1967
எஸ். பாலசுப்ரமணியம்
சங்கத சோசலிச கட்சி
33164
1971
என். கே. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
38882
1977
எ. பொன்னுசாமி
அதிமுக
30574
1980
டி. கே. நல்லப்பன்
இந்திய பொதுவுடமைக் கட்சி
44210
1984
எ. பொன்னுசாமி
அதிமுக
60830
1989
நாச்சிமுத்து கவுண்டரின் மகன் வி. என். சுப்ரமணியன்
அதிமுக (ஜெ)
39654
1991
வி. என். சுப்பிரமணியன்
அதிமுக
77277
1996
என். பெரியசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
60587
2001
கே. எஸ். பழனிசாமி
அதிமுக
72133
2006
சி. பொன்னுதுரை
அதிமுக
59631
2011
என்.டி.வெங்கடாசலம்
அதிமுக
---
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1957
மாணிக்க முதலியார்
காங்கிரஸ்
17110
1962
என். கே. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
24986
1967
என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்
காங்கிரஸ்
30030
1971
கே. சின்னசாமி கவுண்டர்
சுயேச்சை
30100
1977
என். கே. பழனிசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
24532
1980
என். கே. பி. ஜகநாதன்
காங்கிரஸ்
32543
1984
டி. கே. நல்லப்பன்
இந்திய பொதுவுடமைக் கட்சி
32465
1989
ஆர். ஆறுமுகம்
காங்கிரஸ்
24956
1991
டி. கே. நல்லப்பன்
இந்திய பொதுவுடமைக் கட்சி
24060
1996
பி. பெரியசாமி
அதிமுக
43036
2001
என்.கோவிந்தசாமி
கொங்குநாடு மக்கள் கட்சி
40421
2006
என். பெரியசாமி
இந்திய பொதுவுடமைக் கட்சி
51053
2011
கே.சி.பாலு
கொங்குநாடு முன்னேற்ற கழகம்
---
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
C. பொன்னுதுரை
அ.தி.மு.க
59631
2
N. பெரியசாமி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
51053
3
M. ரவிச்சந்திரன்
தே.மு.தி.க
18212
4
T. ஸ்ரீகந்தீஸ்வரன்
பாஜக
1960
5
R. பழனிசாம்
சுயேச்சை
1447
6
B. தேவதாசன்
ஜனதா தலம்
1136
7
K. கிருஷ்ணமூர்த்தி
சுயேச்சை
1066
8
M.M.S. சுப்பிரமணியம்
பகுஜன் சமாஜ் கட்சி
850
9
R. சாமிநாதன்
சுயேச்சை
605
10
V.P. சுப்பிரமணியம்
சுயேச்சை
560
11
M.S. பழனிசாமி
என்.சி.பி
500
12
A. தண்டபானி
எஸ்.பி
486
137506
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
N.D. வெங்கடச்சலம்
அ.தி.மு.க
89960
2
பாலு
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
47793
3
G. அன்பழகன்
பகுஜன் சமாஜ் கட்சி
2033
4
L. அந்தோணிபீட்டர்
சுயேச்சை
1464
5
K. ஆறுமுகம்
ஜனதாதளம்
1371
6
P. தமிழரசு
சுயேச்சை
1026
7
N.P. வெங்கடச்சலம்
சுயேச்சை
925
8
T.V. தங்கமுத்து
சுயேச்சை
845
9
P. ராஜு
சுயேச்சை
823
10
M. தமிழ்செல்வன்
இந்திய ஜனநாயக கட்சி
779
11
K. கந்தசாமி
சுயேச்சை
672
12
A. ராணி
உழைப்பாளி மக்கள் கட்சி
529
13
செல்வன்.N
சுயேச்சை
500
14
ஸ்ரீமதி.S
லோக் சத்தா கட்சி
435
15
சுப்ரமணியம்.P.C
சுயேச்சை
406
149561
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago