ஈரோடு மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. பெருந்துறையில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

2. கோவை, சேலம் புறவழிச்சாலையில் பெருந்துறை அருகில் மூன்று மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

3. மேட்டூர் அணையின் உபரி நீர் சென்னம்பட்டி அந்தியூர் வரட்டுப்பள்ளம் வழியாக ஆப்பக்கூடல் வரை உள்ள ஏரிகளில் சேமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

4. "தாராபுரம் கட்" பூமிகளுக்குப் பாசன வசதி செய்து தரப்படும்.

5. காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் கீழ்பாவனி பாசன கால்வாய்கலுக்கு கான்கீரிட் லையனிங் செய்து சீரமைக்கப்படும்.

6. சாய ஆலைகள், தோல் ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காலிங்கராயன் வாயக்காலில் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

7. ஈரோடு பெருமாள் மலை அடிவாரத்தில் குடியிருந்து வரும் மக்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ஈரோடு நகரில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் அமைக்கப்படும்.

9. தாளவாடியில் மூலிகைப் பூங்கா அமைக்கப்படும்.

10. ஈரோடு நகரிலும், கோபியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

11. ஈரோடு நகரில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும.

12. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குரங்கன் பள்ளப் பாசன நிலங்கள் கழக ஆட்சியில் அறிவித்தபடி கீழ்பவானி பாசனத்திட்டத்துடன்இணைக்கப்படும்.

13. ஈரோடு மாநகரத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற ஊராட்சிக் கோட்டைக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

14. ஈரோட்டில் அமைந்துள்ள சுற்றுவட்டப் பாதையில் லக்காபுரம் பரிசல்துறை அருகில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

15. கொடுமுடி அருகே அறிவுடையார் பாறை – பிலிக்கல் பாளையம் வழியாகக் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும்.

16. ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

17. ஈரோடு மாநகரத்தில் அழகரசன் நகர், பெரியார் நகர், புதுமைக்காலனி ஆகிய பகுதிகளில் இடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளைக் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

18. கோபி நகர மக்களுக்குத் தினமும் குடிதண்ணீர் வழங்கும் வகையில் புதிய குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

19. தாளவாடி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களால் விளைவிக்கப்படும் காய்கனிகள் மற்றும் இதர பொருட்களைச் சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

20. அந்தியூர் ஒன்றியத்தில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

21. ஈரோடு மாவட்டம் பவானி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்று வட்டப்பாதை அமைக்கப்படும்.

22. மணியாச்சி, வரட்டுப்பள்ளம், வழுக்குப்பாறை ஆகிய ஆறுகளை இணைத்து அந்தியூர் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் பாசன வசதி மேம்படுத்தப்படும்.

23. தற்போது ஈரோட்டில் மஞ்சள் ஏலம் ஐந்து இடங்களில் நடைபெறுகிறது. இதனால், விலை வேறுபாடுகளும் பாதிப்புகளும் உள்ளதாகப் புகார்கள் வருகின்றன. மஞ்சள் வியாபாரிகளுடன் கலந்து பேசி, கேரளா போன்ற மற்ற இடங்களில் இருப்பது போல் மஞ்சள் ஏலம் ஈரோட்டில் ஒரே இடத்தில் நடைபெற வசதியாக ஈரோடு நகரில் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனை வளாகம் அமைக்கப்பட்டு, மஞ்சள் விவசாயிகளின் இலாபம் அதிகரிக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

24. வேதபாறை நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.

25. அந்தியூர் அருகே பட்லூரில் புதிய அணை கட்டப்படும்.

26. அந்தியூரில் அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE