திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியில் நத்தம் பேரூராட்சி, நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், சாணார்பட்டி ஒன்றியத்தில் 21, திண்டுக்கல் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகள் உள்ளன. கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் எப்போதும் பசுமையாக காணப்படும். மா, புளிய மரங்கள் விவசாயிகளுக்கு பலன்கொடுக்கின்றன. காய்கறிகள் பயிரிடுவது முதல் அனைத்து விவசாயமும் இப்பகுதியில் செய்யப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக நத்தம் தொகுதி உள்ளது. நத்தம் பேரூராட்சியைதவிர அனைத்தும் சிறிய சிறிய கிராமங்கள் தான். மலைகிராமங்களும் உள்ளன. மலைகிராமங்களுக்கு ரோடு வசதி, அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இது வரை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாம்பழம் அதிகளவில் விளைச்சல் இருப்பதால் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடம் உள்ளது. தொகுதிக்குள் செல்லும் சந்தனவர்த்தினி ஆறில் மணல் திருட்டால் ஆறு உருதெரியாமல் போய்விட்டது. இதனால் ஆற்றோர விவசாய பகுதிகளில் நிலத்தடிநீர் குறைந்துவிட்டது என விவசாயிகள் கூறுகின்றனர். சிறுமலையில் இருந்து வரும் நீரை தடுத்து ஒரு தடுப்பணை கட்டவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை கனவாகவே உள்ளது. மலைகள், குன்றுகள் அதிகளவில் இருந்தும் மழைநீரை சேகரிக்க தடுப்பணைகள் பல இடங்களில் கட்டுவதற்கு வாய்ப்பிருந்தும் கண்டுகொள்ளப்படவில்லை.
நத்தத்தில் கிராமபுற மாணவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அரசு கல்லு£ரி என்ற மக்களின் வேண்டுகோள் வேண்டுகோளாகவே உள்ளது. நத்தம் தொகுதி 1977 ம் ஆண்டு உருவானது முதல் நடைபெற்ற 10 தேர்தல்களில் (1999 இடைத்தேர்தல்) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆண்டி அம்பலம் தொடர்ந்து ஆறு முறை எம்எல்ஏ வாக வெற்றி பெற்றார். இவர் இறந்தபோது 1999 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வைசேர்ந்த விசுவநாதன் வெற்றிபெற்றார். இதை அடுத்து வந்த தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் அதிமுக வைச்சேர்ந்த நத்தம்விசுவநாதன் வெற்றிபெற்று அமைச்சராக உள்ளார். திமுக ஒரு முறை கூட இந்ததொகுதியில் வெற்றிபெற்றதில்லை.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
எஸ்.ஷாஜகான்
அதிமுக
2
ஆ.ஆண்டிஅம்பலம்
திமுக
3
ஜி.கார்த்திகேயன்
தேமுதிக
4
கே.சீரங்கன்
பாமக
5
எம்.சந்தானகிருஷ்ணன்
ஐஜேகே
6
வெ.சிவசங்கரன்
நாம் தமிழர்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,27,532
பெண்
1,30,933
மூன்றாம் பாலினத்தவர்
40
மொத்த வாக்காளர்கள்
2,58,505
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2006 சட்டமன்ற தேர்தல்
131. நத்தம்
வ எண்
பெயர்
கட்சி
வாக்குகள்
1
R. விஸ்வநாதன்
அ.தி.மு.க
62292
2
M.A. ஆண்டிஅம்பலம்
தி.மு.க
58532
3
V. கணேசன்
தே.மு.தி.க
7754
4
P. வேதிகரன்
சுயேச்சை
1762
5
A. சரவணன்
பி.ஜே.பி
1038
6
A. முருகேசன்
பி.எஸ்.பி
711
7
A. அண்ணாமலை
சுயேச்சை
432
8
M. தாமோதரன்
எல்.ஜே.பி
428
9
S. ஷேக் முகமது தாஜுதின்
சுயேச்சை
374
10
C. சந்திரன்
சுயேச்சை
291
2011 சட்டமன்ற தேர்தல்
131. நத்தம்
வ எண்
பெயர்
கட்சி
வாக்குகள்
1
R. விஸ்வநாதன்
அ.தி.மு.க
94947
2
K. விஜயன்
தி.மு.க
41858
3
M.A. ஆண்டிஅம்பலம்
சுயேச்சை
29834
4
K. துரை
சுயேச்சை
1870
5
G. வெங்கடேசன்
சுயேச்சை
1038
6
C. குட்டியான்
பி.ஜே.பி
980
7
R. ஜெயச்சந்திரன்
சுயேச்சை
834
8
M. முகமது மீரான்
சுயேச்சை
735
9
M. பாக்கியராஜ்
பி.எஸ்.பி
644
10
A. பஞ்சவர்ணம்
சுயேச்சை
587
11
C. அருள் செல்வன்
சுயேச்சை
483
12
P. அழகன்
சுயேச்சை
439
13
S. சுப்பிரமணி
சுயேச்சை
332
14
S. ஆனந்தன்
சுயேச்சை
313
15
S. தமிழ்செல்வி
சுயேச்சை
257
16
S. ஷேக் முகமது தாஜுதின்
சுயேச்சை
255
17
C.K. முருகேசன்
சுயேச்சை
246
18
K. வள்ளிநாதன்
சுயேச்சை
212
19
T. சக்திவேல்
சுயேச்சை
206
20
P. மணிகண்டன்
சுயேச்சை
181
176251
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago